திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

நிஜ மஞ்சுமல் பாய்ஸால் கொடைக்கானலில் ஏற்பட்ட களேபரம்.. ரியல் குட்டனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காமெடி நடிகர்

Real Manjumal Boys paid revisit to Kodaikanal: “உண்மைக்கும் அழிவில்லை! தரமான படைப்புகளுக்கும் அழிவில்லை!” என்பதை காலம் கடந்து சொன்ன கதை தான் குணா. 1991 ஆண்டு  கமல் நடிப்பில் வெளிவந்த குணா திரைப்படம் பல்வேறு மோசமான விமர்சனங்களை பெற்று இயக்குனரை கண்ணீர் வடிக்க வைத்தது. ஆனால் இன்று 33 வருடங்களுக்குப் பின் அதே இயக்குனர் தன் படத்தை பற்றி பேசுவதைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் காரணம் மஞ்சுமல் பாய்ஸ். 

சமீபத்தில் மலையாள சினிமாவில் சிதம்பரம் பி போடுவல் இயக்கத்தில் சௌபின் சாகிர், பாஷி போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் வெளிவந்த  மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்  தமிழக மற்றும் கேரளா என பல இடங்களிலும்  வசூலில் வரலாறு காணாத சாதனை படைத்து வருகிறது. 

கொடைக்கானலில் 1991 ஆண்டு வரை டேவில்ஸ் கிச்சன் என அழைக்கப்பட்ட குகை, கமல் நடித்த குணா திரைப்படத்திற்கு பின் குணா குகை என்றே அழைக்கப்பட்டது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் குணா குகையை பார்க்காமல் திரும்புவதில்லை. அப்படியாக 2006 இல் கேரளாவில் இருந்து வந்த நண்பர்கள்  குழுவில் ஒருவர் குகைக்குள் தவறி விழுந்து விட, அவரை மற்றொரு நண்பர் கடின முயற்சிகளுக்குப் பின் காப்பாற்றியுள்ளார். 

Also read: நடிப்பில் கமல் மிரட்டிய 5 கிளைமாக்ஸ் சீன்கள்.. கண் கலங்க வைத்த ‘அன்பே சிவம்’

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் மஞ்சுமல் பாய்ஸ். சிறந்த திரைக்கதையுடன், திகைக்க வைக்கும் விறுவிறுப்புடன், சுவாரசியமாக  சொன்னதின் பலன், வசூலில் பேய் மழை கொட்டுகிறது. அது மட்டுமா கமல் முதற்கொண்டு தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும்  சினிமா ஆர்வலர்கள் பலரும் இதன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 

இதனை தொடர்ந்து யுடியூப் சேனல் ஒன்றின் நிகழ்ச்சிக்காக மீண்டும் கொடைக்கானலில் ஒன்று கூடி உள்ளனர் ரியல் மஞ்சுமல் பாய்ஸ். 2006ல் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் அவர்கள் குணா குகைக்கு அருகில் வந்து புகைப்படம்  எடுத்துக் கொண்டனர். அங்கு உள்ள சுற்றுலா பயணிகள் அனைவரும் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.  கூட்டமும்  கட்டுக்கடங்காமல் போனது.

ரியல் குட்டனான ஷிஜூ மற்றும் சுபாஷ் இவர்கள் அனைவரையும் கூட்டம் சூழ்ந்தது. இது மட்டுமா அங்கே எதிர்பாக்காத விதமாக தமிழ் காமெடி நடிகர் முனீஸ்காந்தும் ஷிஜூ மற்றும் அவரது குழுவினர்களுடன் செல்பி எடுத்து  சர்ப்ரைஸ் கொடுத்தார்.

Also read: கொக்கி குமாரால் கொக்கி போடப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் டைரக்டர்.. ஊருக்கு போகவிடாமல் கட்டம் கட்டும் தந்திரம் 

- Advertisement -

Trending News