திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

சிவகார்த்திகேயனுக்கு கடைசியா வியாபாரமான 5 படங்கள்.. ஓடிடி-ல் அதிக விலைக்குப் போன பயோபிக் மூவி

Sivakarthikeyan in Ott Business: தற்போதைய படங்கள் திரையரங்குகளையும் தாண்டி ஓடிடி மூலமாகவும் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் இப்பொழுது படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையால் ஓடிடி- தளத்தில் அப்படங்களை அதிக பணத்தை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வியாபாரமான ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

டான்: சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு டான் படம் வெளிவந்தது. இதில் பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் எதிர்பார்த்ததையும் தாண்டி ரசிகர்களிடம் நல்ல பெயர் பெற்று, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்த வகையில் இப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் லாபமடைந்தது. மேலும் இப்படத்தின் உரிமையை netflix ஓடிடி தளம் 50 கோடி கொடுத்து வாங்கியது.

பிரின்ஸ்: கே.வி.அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு பிரின்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கலவையான விமர்சனங்களை அயலான்பெற்று பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஆனாலும் ஹாட்ஸ்டாரில் இப்படம் 40 கோடியில் விற்பனை ஆனது.

Also read: வாலைச்சுருட்டி கொண்டு கப்சிப் ஆன சிவகார்த்திகேயன்.. இதுவரை வாங்குன அடி போதும்டா சாமி

மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் அதிதி சங்கர், சரிதா, மிஸ்கின், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல ஒரு இமேஜை வாங்கி கொடுத்தது. மேலும் இப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட 90 கோடி லாபத்தை சம்பாதித்து கொடுத்தது. அத்துடன் அமேசான் தளத்தின் மூலம் 33 கோடிக்கு விற்பனையானது.

அயலான்: ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் பொங்கலை ஒட்டி அயலான் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கொரோனா காலத்திற்கு முன் தயாரிக்கப்பட்ட படமாக இருந்தாலும் நிதி நெருக்கடியால் இந்த வருடம் தான் வெளியானது. இப்படமும் சிவகார்த்திகேயனுக்கு வணிக ரீதியாக வெற்றி கொடுத்து கிட்டத்தட்ட 96 கோடி வசூலை வாரி குவித்தது. அத்துடன் சன் நெக்ஸ்ட் மூலம் 45 கோடி லாபத்தை பெற்றது.

அமரன்: கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பயோபிக் படமாக மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்தன் வரதராஜன் கதையை கொண்டு வருகிறார். இதில் சாய் பல்லவி, ராகுல் போஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படம் ஆரம்பத்தில் 100 கோடிக்கு பட்ஜெட்டில் போடப்பட்டது. ஆனால் தற்போது 150 கோடிக்கு மேல் பணத்தை வாரி இறைத்து வருகிறார். மேலும் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னே netflix தளத்தில் 60 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது.

Also read: அமரன் ரிலீசுக்கு நாள் குறித்த படக்குழு.. சென்னையில் டூயட் ஆட தயாராகிய சிவகார்த்திகேயன்

- Advertisement -spot_img

Trending News