ஒரே கொக்கியில் 2 பலாப்பழத்தை பறித்த இயக்குனர்.. எஸ்ஜே சூர்யாவை வைத்து வளைத்த ஜாக்பாட்

Actor Sj Surya : எஸ்ஜே சூர்யா இப்போது இயக்குனர்களின் விருப்பமான நடிகராக இருக்கிறார். ஏனென்றால் தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களில் இவர் தான் வில்லனாக நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இப்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ராயன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் எஸ்ஜே சூர்யாவை வைத்து ஒரே கொக்கியில் இரண்டு பலாப்பழத்தை பறிக்க திட்டம் தீட்டி உள்ளார் ஷங்கர். அதாவது லைக்கா தயாரிப்பில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்தி சிங் ஏகப்பட்ட திரைப்படங்கள் நடித்து வரும் நிலையில் எஸ்ஜே சூர்யாவும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியன் படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை சேர்த்து வெளியிட இருக்கிறார்.

இந்த இரண்டு பாகங்களிலும் எஸ்ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரல் நடித்து இருக்கிறார். மேலும் இந்தியன் படப்பிடிப்பில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பை பார்த்து மிரண்டு போன ஷங்கர் தன்னுடைய கேம் சேஞ்சர் படத்திலும் சில காட்சிகள் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அதாவது ஷங்கர் இந்தியன் 2 படத்துடன் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 8 நாட்கள் மீதம் உள்ள நிலையில் அதில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருக்கிறார்.

இதன் மூலம் கண்டிப்பாக தெலுங்கு சினிமாவிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்தியன் 2 படத்தில் நடித்த பிரபலங்களில் கமல் மற்றும் ஷங்கர் இருவருக்கும் மட்டும் தான் இந்தியன் 3 படத்திற்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்தியன் 3 படத்திற்கு சம்பளம் கொடுக்காமலேயே எஸ்ஜே சூர்யாவை நடிக்க வைத்துள்ளார் ஷங்கர்.