திமுகவுடன் அதிமுக கூட்டணியா.? விஜய்யின் கட்சியை காலி பண்ண இந்த கோமாளிகள் போதும், உஷாரு

Vijay: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் வட்டாரம் மிகுந்த பரபரப்பாகி வருகிறது. இதில் கமலின் மக்கள் நீதி மய்யம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் தளபதி அறிக்கைகள் விடுவது, மக்கள் சம்பந்தப்பட்ட நலத்திட்டங்கள் என பிசியாக இருக்கிறார். இந்த நேரத்தில் அவருடைய விசுவாசிகள் என்ற பெயரில் இருக்கும் சில கோமாளிகள் கட்சியை காலி பண்ணும் நோக்கில் லூஸ் டாக் விட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் கட்சி குறித்து பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது ஒரு விசுவாசி 2026 தேர்தலில் விஜய்யை தோற்கடிக்க திமுக, அதிமுக இணைவார்கள் என்று கூறியுள்ளார்.

கட்சியை காலி பண்ணும் கோமாளிகள்

அந்த அளவுக்கு தமிழக வெற்றிக் கழகம் டஃப் கொடுக்கும் என்றும் நாசுக்காக தெரிவித்துள்ளார். இதுதான் தற்போது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா எனவும் கேட்க வைத்துள்ளது.

ஏனென்றால் திமுக, அதிமுக இரு கட்சிகளும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். தமிழக அரசியல் வரலாற்றில் இவர்கள் பங்கு மிகப் பெரியது. அப்படிப்பட்ட கட்சிகள் விஜய்யிடம் பயந்து போகும் என கூறுவது தான் வேடிக்கையாக இருக்கிறது.

இப்படிப்பட்டவர்களை நம்பியா கட்சியை ஆரம்பித்தார் தளபதி? ஏதோ சினிமாவில் வருவது போல் அரசியலை சாதாரணமாக எடை போட்டு இருக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் முளையிலேயே கிள்ளி வைக்கவில்லை என்றால் தளபதியின் கட்சி ஆட்டம் கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →