சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அம்பத்தி ராயுடு போல் ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் 2 இந்திய வீரர்கள்.. 3D சர்ச்சை போல் இருவருக்கும் வந்த ஆபத்து

Bad attitute of Two indian Cricketers: நல்ல திறமைகள் இருந்தும் அம்பத்தி ராயுடு தன்னுடைய முன்கோபத்தால் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை இழந்து, இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். இவர் நல்ல ஒரு ஆக்ரோஷமான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய அணியில் இடம்பெற்று நன்றாக ஆடி வந்தார்.

2019 உலகக்கோப்பை கால கட்டங்களில் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல், இவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்னை ஏன் எடுக்கவில்லை, என்று ராயுடு கேட்கவே விஜய சங்கர் 3டி பிளேயர் என கூறி இவரை அணி நிர்வாகம் நிராகரித்தனர்.

விஜய் சங்கர் பேட்டிங், பௌலிங், பில்டிங் என அனைத்திலும் சிறந்தவர் என்று பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறியது. அப்படியானால் அவர் விளையாடும் போது நீங்கள் 3d கண்ணாடி போட்டு பாருங்கள் என்று கிண்டல் அடித்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார் ராய்டு. அதிலிருந்து அவர் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டார்.

இப்பொழுது அவரைப் போலவே இரண்டு இந்திய வீரர்கள் ஓவர் ஆட்டிடியூட் காட்டி வருகின்றனர். பார்ட்டி, பப் என ஓவர் ஆட்டம் போட்டு வருவதால் இவர்கள் மீது நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்பொழுது அவர்கள் இருவரும் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இசான் கிசான் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் வரையறுக்கப்பட்ட விதிகளை மீறி நடந்து கொண்டதால் கடும் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

ஐயர் மற்றும் இசான் கிசான் கிரிக்கெட் கேரியர் வரும் காலத்தில் கேள்விக்குறியாகி உள்ளது. ஐயர் இந்திய அணிக்கு விளையாடாமல் கே கே ஆர் அணிக்கு விளையாடுவதில் மிக ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல் இஷான் கிஷான் தனக்கு பிட்னஸ் இல்லை என்று கூறிவிட்டு ஐபிஎல் விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

Trending News