மொத்தமாய் கோட்டை விடும் ருத்ராஜ்.. கேப்டன் பொறுப்பை மட்டுமல்ல கப்பையும் கோட்டை விட்ட தோனி

Captain Rudraj who misleads the Chennai team: நடப்பு ஐபிஎல் சீசன் 17 போட்டிகள் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக நடந்து வருகிறது. 

இதில் நான்கு போட்டிகளை எதிர் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளை பதிவு செய்து தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

மகேந்திர சிங் தோனிக்காகவே கிரிக்கெட்டை கண்டு வரும் ரசிகர்களின் மத்தியில், தோனி கேப்டனாக இல்லாதது சற்று வருத்தத்தை அளித்தாலும் தோனி சிஎஸ்கே வில் இருக்கிறார் என்பதையே பலமாக  நம்பி உள்ளனர்.

அது தவிர முதல் போட்டியில் சிஎஸ்கே தரமான வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து கேப்டன் ருத்ராஜ் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் சென்னை  ரசிகர்கள். 

ஆனால் கடந்த போட்டியிலும் அதற்கு முந்தைய போட்டியிலும் தொடர்ச்சியாக தவறான முடிவை எடுத்து சிஎஸ்கே அணியை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறாரோ என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தில்  சென்னை அணியுடன் மோடி மோதிய ஐதராபாத் அணி டாஸ் வென்று சென்னையை பேட்டிங் செய்ய வைத்தது

முதலில்  இருந்தே சற்று தடுமாறிய சென்னை அணியில் கேப்டன் ருத்ராஜ் 26 ரன்களில் ஆட்டம் இழக்க துபே வந்து சிக்ஸர் மற்றும் பவுன்சர்கள் விலாசி ஆட்டத்தை சற்று சூடு பிடிக்க வைத்தார்.

வெற்றி கொண்டாட்டம் அடங்குவதற்குள், 45 ரன்கள் உடன் அவுட் ஆகி வெளியேறினார் துபே. டோனி ஒரு ரன்னுடன் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது சென்னை அணி.

ஹெட் கேச்சை மிஸ் செய்த மொயின் அலி

தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஐதராபாத் அணி. 

ஐதராபாத் அணி 18.1 ஓவரிலேயே நாலு விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக தன்வசமாக்கியது

ஈசியாக வென்று இருக்க வேண்டிய மேட்சை கேப்டன் ருத்ராஜ், தனது தவறான வழிகாட்டுதலால் சென்னை அணியை கடின பாதைக்கு இட்டுச் சென்றார் என்றே கூறலாம்.

முதலில் பவர் பிளே ஒவரிலேயே இரண்டு அல்லது மூன்று விக்கெட் எடுக்காமல் பில்டிங்கில் ரஹானேவை நிறுத்தாமல் மொயின் அலியை நிறுத்தி இருந்தார்.

இவர் இரண்டாவது பந்தில் ஹெட் அடித்த பந்தில் எளிதான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டது என்பது ஐதராபாத் அணி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

அது மட்டுமின்றி ஸ்விங் செய்யக்கூடிய  முகேஷ் சௌத்ரியை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வந்து மாபெரும் தவறு செய்தார் ருத்ராஜ்.

இதனால் மொத்தமாக சென்னை அணி போராட்டம் ஏதும் இல்லாமல் சாதாரணமாகவே தோல்வியை தழுவியது. 

இப்படியே போய்கிட்டு இருந்தது என்றால் கப்பையும் சீக்கிரமா கொடுத்துட்டு ஃப்ரீயா இருந்து விட வேண்டியது தான்.

சென்னை அணியின் அடுத்த ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் வரும் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ளது.