வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

ட்ரெண்ட் தெரியாமல் வெங்கட் பிரபு மீது வன்மத்தை கக்கும் ராமராஜன்.. தான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு இருக்கும் சாமானியன்

Venkat Prabhu: ‘ நாங்க எல்லாம் அந்த காலத்துல’ என்ற ஆரம்பிக்கும் வசனத்தை பல வீடுகளில் தினமும் கேட்டிருப்போம் . இந்த புராணம் இப்போது தமிழ் சினிமாவில் அதிகமாகிவிட்டது. நிறைய மூத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் கொடுக்கும் பேட்டிகளில் நன்றாக கவனித்து பாருங்கள்.

நாங்கள் ஷூட்டிங் பண்ணும் போது இப்படி இருந்துச்சு, ஆனா இப்போ இருக்கிறவங்க இப்படி இருக்காங்கன்னு ஏகத்துக்கும் கதை சொல்லுவாங்க. காலத்துக்கு ஏத்த மாதிரி எல்லாமே மாறிடும்னு இவங்க புரிஞ்சுக்காதது தான் இப்படி பேச்சா வெளியில வருது.

அப்போ இருந்த தொழில்நுட்பம் வேறு, இப்பொழுது இருக்கிற தொழில்நுட்பம் வேறு என்பதை இவர்கள் புரிந்து விட்டாலே போதும். மூத்த கலைஞர்களுக்கும், இப்ப இருக்கவங்களுக்கும் அடிக்கடி கருத்து விமர்சனம் நடந்துட்டு வருது.

அதுக்கு அவர்களுக்குள் இருக்கும் சொந்த வன்மங்கள் காரணம் என்று சொல்லிட முடியாது. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் ஜெனரேஷன் கேப் தான். சமீபத்தில் நடிகர் ராமராஜன் வெங்கட் பிரபுவை பற்றி ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.

அந்த பிரச்சனை கூட இந்த ஜெனரேஷன் கேப்பினால் வந்தது தான். பலரும் கூடியிருக்கும் மேடையில் வெங்கட் பிரபு எனக்கு கதை சொல்ல வந்தார், ஆனா அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் வெங்கட் பிரபு படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னார். இது சாதாரண நேரத்தில் சொல்லியிருந்தா பெரிய விஷயமாக இருக்காது. சரியான நேரத்தில் வெங்கட் பிரபு, விஜய் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே இந்த கருத்து வெளிவந்தது தான் பிரச்சனை.

பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றாலே ஜாலியா தான் இருக்கும். கூட்டமா பிரெண்ட்ஸ், சிகரெட், ட்ரிங்க்ஸ் என இந்த காலகட்டத்திற்கு ஏத்த மாதிரி இருக்கும். அறிமுகமே இல்லாத பத்து பதினைந்து பசங்கள வச்சு சென்னை 28 என்ற ஹிட் படத்தை கொடுத்தார்.

இந்த படத்தின் கதையை கேட்டுட்டு நான் எம்ஜிஆர் சிவாஜிக்கு எல்லாம் பாட்டு எழுதி இருக்கேன், உன் படத்துக்கு எழுத மாட்டேன்னு வாலி சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் இந்த காலத்து ட்ரெண்ட்டை புரிந்து கொண்டதால் தான் அவரால் வெங்கட் பிரபுவுடன் இணைந்து வேலை செய்ய முடிந்தது.

அதனாலதான் என்னவோ அவருக்கு வாலிபக் கவிஞன் வாலி என பெயர் இருந்தது. ராமராஜனை பொறுத்த வரைக்கும் அவர் வளர்ந்து வந்த காலத்தில் மக்கள் அவரை அடுத்த எம்.ஜி.ஆராக பார்த்தார்கள். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஹீரோவாக தான் அவர் படங்களில் நடித்தார்.

அதனால் தான் வெங்கட் பிரபுவின் படத்தில் இது போன்ற கேரக்டர்களில் நடிக்க கூடாது என தீர்மானித்திருக்கலாம். அதை வெளியில் சொன்ன விதம் தான் இப்போது பிரச்சனை. அது மட்டும் இல்லை எல்கேஜி படத்தில் ராமராஜனின் நடிக்க வைக்க ஆர் ஜே பாலாஜி அணுகிய போதும் அவர் மறுத்துவிட்டார்.

சீறிவரும் காளை மாட்டை, டவுசர் போட்ட ஹீரோ ‘ பேச்சி பேச்சி’ என பாட்டு பாடி அடக்குவது என்பதெல்லாம் இந்த காலத்து சினிமாவுக்கு செட்டாகாது. ஒரு வேளை இந்த காலத்து ஸ்டைல் என்ன என்பதை புரிந்து கொண்டு, ராமராஜன் வந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கலாம்.

பழைய ஸ்டைலை எல்லாம் உதறி தள்ளிவிட்டு, மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த எத்தனையோ ஹீரோக்கள் இப்ப சினிமாவில் ஜெயித்து வருகிறார்கள். ஆனால் ராமராஜன் மட்டும் இன்னும் நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு சுத்திகிட்டு இருக்காரு.

- Advertisement -spot_img

Trending News