சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

2024 டி20 உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட இளம் புயல்.. விராட் கோலியால் அணிக்குள் ஏற்பட்ட குழப்பம்

2024 T20 World Cup Confusion caused by Virat Kohli in the team: கிரிக்கெட் ரசிகர்களின் பேராதரவினால் ஐபிஎல் சீசன்17 போட்டிகள் களைகட்டி வருகிறது. 

கோப்பையை தட்டி பறிப்பதற்கும், தக்க வைப்பதற்கும் அணிகளுக்கிடையே தரமான போட்டி நிகழ்ந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் வேலைகள் தீவிரமடைந்து உள்ளது.

இதன் பொருட்டு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோஹித் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மூவரும் சந்தித்துக் கொண்டு நீண்ட விவாதத்திற்கு பின்பு 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

இளம் புயல் ஜெய்ஸ்வாலை அதிரடியாக நீக்கிய தேர்வு குழு

டி20 கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட குழுவில் துவக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா உடன் விராட் கோலியை களம் இறக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

2022 ஆம் ஆண்டுக்குப் பின் வலது மற்றும் இடது கை ஆட்டக்காரர்கள் ஜோடியாக களம் இறங்க வேண்டும் என்ற கொள்கையினை ஓரம் கட்டிவிட்டு இதுவரை மூன்றாவது வரிசையில் இருந்த  விராட் கோலி தற்போது துவக்க ஆட்டக்காரராக மாற்றி அமைத்து உள்ளனர்..

ஏற்கனவே துவக்கட்டக்காரராக இருந்த இளம் புயல் ஜெயஸ்வாலை அதிரடியாக நீக்கிவிட்டு மாற்று துவக்க ஆட்டக்காரருக்கான வாய்ப்பு கூட வழங்காமல் முற்றிலும் அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான முடிவை எடுத்துள்ளனர்.

மாற்று துவக்க ஆட்டக்காரராக சுப்மன் கில்லை ஐ தேர்வு செய்ய உள்ளனர். இது ஜெயஸ்வால் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் இடையே கடும்  அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பவுலிங்கில் ஹர்திக் பாண்டியா அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவருக்கு அதிக ஓவர்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலி துவக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதால் அணியில் பலவகையிலும்  மாற்றங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு இருப்பது உண்மையே. 

2022 ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அரைஇறுதி வரை செல்வதற்கு காரணமே விராட் கோலி தான். 

டி20 உலக கோப்பையின் போஸ்டர் வீரராக இருந்து வரும், விராட் கோலி இருந்தால் மட்டுமே உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியையும் அதற்கு பின் ஜூன் 9 தேதி நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தானையும் எதிர்கொள்ள உள்ளதாக தகவல்.

Trending News