Hardik Pandya : இந்தக் கோடை விடுமுறைக்கு கொண்டாட்டமாக ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் மும்பைய இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் அதிக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதாவது மும்பை அணிக்கு எதிராக போராடிய ஹைதராபாத் அணி வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக ரன் எடுத்து சாதனை படைத்திருந்து. இதற்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் மோசமான பேட்டிங் என்று கூறப்பட்டது. சமீபகாலமாகவே ரசிகர்களுக்கு ஹர்திக் பாண்டியா மீது ஒரு அதிருப்தி இருந்து வருகிறது.
இதன் காரணமாக வருகின்ற டி20 உலக கோப்பையில் பாண்டியாவுக்கு பதிலாக தோனியின் ஏகே-47 களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாரமாக விளையாடி வருகிறார் சிவம் துபே.
ஐபிஎல்லில் கலக்கிய சிவம் துபே
கடந்த 2023 ஆம் ஆண்டில் இருந்து அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். மேலும் நேற்றைய தினம் நடந்த போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக விளையாண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார்.
சுரேஷ் ரெய்னா உட்பட பலரும் டி20யில் சிவம் துபே பங்கு பெற்றால் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கின்றனர். டி20 பொறுத்தவரையில் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங் என அனைத்திலும் ஆல் கவுண்டராக இருக்க வேண்டும்.
மேலும் ஐபிஎல்லில் பேட்டிங்கில் தனது திறமையை காட்டிய நிலையில் பவுலிங்கிலும் தனது திறமையை காட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆகையால் வருகின்ற டி20யில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சிவம் துபே களமிறங்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.