வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

Vadivelu: அடேங்கப்பா சன் டிவியையே விலைக்கு வாங்கிடலாம் போல.. CWC 5-க்கு போட்டியா கரண்டி பிடிக்க வடிவேலு கேட்ட சம்பளம்

Actor Vadivelu: நேற்றிலிருந்தே சின்னத்திரை வட்டாரம் ஒரு பரபரப்புக்கு வந்திருக்கிறது. கடந்த வாரம் விஜய் டிவியில் குக் வித் கோமாளி 5 ஆரவாரமாக தொடங்கப்பட்டது.

அதற்கு போட்டியாக இப்போது சன் டிவி அதே டீமை வைத்து டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கான ப்ரோமோ வெளிவந்த நிலையில் வடிவேலு இதில் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

தற்போது சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரை பக்கம் கவனம் திருப்பியுள்ளார். ஏற்கனவே சன் டிவி மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதியை களம் இறங்கியது.

ஆனால் அந்த ஷோ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் தற்போது மீண்டும் ஒரு சமையல் நிகழ்ச்சியை கொண்டு வந்துள்ளது.

வடிவேலு கேட்ட சம்பளம்

இதற்காக வடிவேலு சன் டிவியை விலைக்கு வாங்கும் அளவுக்கு சம்பளம் கேட்டாராம். ஏனென்றால் விஜய் சேதுபதிக்கு ஒரு எபிசோடுக்கு 5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது.

அதைத்தான் வைகை புயலும் எதிர்பார்த்தாற் போல. ஆனால் அவ்வளவெல்லாம் முடியாது என சன் டிவி கரார் காட்டி இருக்கிறது.

அதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் இப்போது ஒரு எபிசோடுக்கு ஒரு கோடி என முடிவு செய்துள்ளார்களாம். இந்த தகவல் தற்போது கசிந்துள்ள நிலையில் வடிவேலுவின் என்ட்ரி குறித்த ப்ரோமோ விரைவில் வெளிவர உள்ளது.

மேலும் விஜய் டிவியில் நிகழ்ச்சி நடக்கும் அதே நேரத்தில் இந்த ஷோ ஒளிபரப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் கரண்டி பிடிக்க வரும் வடிவேலு நிச்சயம் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவார் என நம்பலாம்.

Trending News