ஐபிஎல் அலை அடிக்கும் நிலையில் அடுத்ததாக டி20 உலககோப்பை சூடு பிடித்திருக்கிறது. கிரிக்கெட்டை பொருத்தவரையில் குழுவாக செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். ஐபிஎல்யில் சிறப்பாக விளையாடிய பலரை டி20 உலக உலக கோப்பையில் இந்திய அணி தேர்வு செய்துள்ளது.
ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டு டி20 தொடங்க இருக்கிறது. அவ்வாறு இந்தியாவிற்காக விளையாடும் 15 போட்டியாளர்கள் யார் என்பதை பார்க்கலாம். ஐபிஎல் இல் பங்கம் பண்ணிய அணிகளோடு இந்தியா புலிகள் இணைந்துள்ளது.
டி 20 யில் ரோகித் சர்மா கேப்டனாக களமிறங்குகிறார். கடந்த சில மாதங்களாகவே சர்ச்சையான போட்டியாளராக பார்க்கப்படும் ஹர்திக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மோசமாக விளையாடியதற்கு இவர் தான் காரணம் என்று கூறப்பட்டது.
டி20 உலக கோப்பையில் பங்குபெறும் இந்திய அணி பட்டியல்
தற்போது இந்திய அணி அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுத்துள்ளது ஆச்சரியம் அளித்துள்ளது. அடுத்ததாக விராட் கோலி, ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் இடம்பெறுகின்றனர். விபத்தின் காரணமாக நீண்ட நாட்களாக பங்கு பெறாமல் இருந்த ரிஷப் பந்த் கிரிக்கெட் கீப்பராக களம் இறங்குகிறார்.
அதேபோல் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்திப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் இந்திய அணியில் பங்கு பெறுகிறார்கள்.
அர்ஷ்தீப் சிங், பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் களம் இறங்குகின்றனர். மேலும் ரிசர்வ் வீரர்களாக சுப்மன் கில், ரிங் சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் போன்றோர் உள்ளனர். ரோகித் சர்மாவின் இந்த படையை பார்த்து உலக கிரிக்கெட் நடுங்குகிறது.
எம்எஸ் தோனி கேப்டனில் 2007 ஆம் ஆண்டு டி20 கப்பை இந்திய அணி அடித்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ரோஹித் அணி அடிக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.