Karthi expects for last 2 films: மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கார்த்தி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம், ரசிகர்களிடையே பெருமளவு வரவேற்பு பெற்றது. இப்படி ஏறுமுகமாக இருந்தவருக்கு, சறுக்கல் ஜப்பான் வடிவில் வந்தது
கடந்த தீபாவளிக்கு வெளிவந்த கார்த்தியின் ஜப்பான் எதிர்பார்த்த வரவேற்பை பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது.
நிறைய படங்கள் நடிக்கிறார், எல்லாமே மல்டி ஹீரோ சப்ஜெக்ட் தான். தனித்துவமாக நடித்து ஹிட் கொடுத்து நாலு வருஷம் ஆச்சு.
தற்சமயம் கார்த்தியின் படங்கள் பெரிதாக பேசும்படி இல்லாததால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார்.
இருந்த போதும் கார்த்தியின் கைவசம், இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படங்களான தீரன் அதிகாரம் 2, கைதி 2 என பல படங்கள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கின்றன.
96 பட புகழ் பிரேம்குமார் உடன் கூட்டணி போடும் கார்த்தி
தற்போது 96 பட புகழ் பிரேம் குமாருடன் ஒரு எமோஷனலான காதல் கதையில் ஒன்றிணைந்து உள்ளார் கார்த்தி. கிராமத்துப் பின்னணியில் குடும்ப பாங்கான திரைப்படத்தில் இணைந்துள்ளார் கார்த்தி.
மெய்யழகன் என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் இளைஞர்களை கவரும் வண்ணம் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் தான் இதை தயாரித்து வருகிறது
கார்த்தியுடன் ஸ்ரீ திவ்யா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் இணைய உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் பொருட்டு மே 1 விடுமுறை தினமான போதும் இரண்டு மட ஊதிய தொகையுடன் மெய்யழகன் சூட்டிங் நடந்து உள்ளதாம்.
அந்த அளவுக்கு வெற்றி பெறும் முனைப்போடு வெறித்தனமாக செயல்பட்டு வருகிறார் கார்த்தி.
கார்த்தி மற்றும் நலன் கூட்டணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வா வாத்தியாரே என்ற திரைப்படத்திற்காக மீண்டும் ஜோடி சேர்ந்து உள்ளார் கார்த்தி.
ஏற்கனவே திரைப்படம் பாதி முடிந்த நிலையில், மெய்யழகன் திரைப்படத்தில் நடித்து வந்தார். தற்போது மெய்யழகன் திரைப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் வா வாத்தியாரை படத்தில் இணைய உள்ளார் கார்த்தி.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இதில், இடையிடையே கார்த்தி, எம்ஜிஆர் போல் மாறி கருத்து சொல்வதாக தரமான பேண்டஸி கதையை வடிவமைத்து உள்ளார் நலன் குமாரசாமி.
இந்த இரு படங்களுமே கார்த்தியின் சினிமா கேரியரில் திருப்புமுனையை உண்டாக்கும் என சினிமா ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.