எதிர்நீச்சல் தொடர் பல மாதங்களுக்கு பிறகு இப்போது தான் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. அதாவது இந்த தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார்.
நம்பர் ஒன் டிஆர்பியில் இருந்த எதிர்நீச்சல் தொடரை தொடர்ந்து அதே வரவேற்புடன் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று சன் டிவி நினைத்தது. அதன்படி குணசேகரனாக நடித்தால் யார் நன்றாக இருக்கும் என்று குழு அமைத்து யோசித்தனர்.
அப்போது தான் கிடாரி படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்த வேலராமமூர்த்தி ஓரளவு மாரிமுத்துடன் உருவ ஒற்றுமையில் இருப்பதாக அவரை கமிட் செய்தனர். ஆரம்பத்தில் வேலராமமூர்த்தி படத்தில் பிசியாக இருப்பதாக கூறி இந்த தொடரில் நடிக்க சம்மதம் தெரிவிக்காமல் இருந்தார்.
எதிர்நீச்சல் தொடரால் சன் டிவிக்கு ஏற்பட்ட இழப்பு
சன் டிவி அதிகபடியாக சம்பளத்தை கொடுத்து ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து விட்டனர். ஆனால் சொந்த செலவில் சூனியம் வைத்தது போல் வேல ராமமூர்த்தியால் எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பி மளமளவென சரிய தொடங்கியது.
இதற்கு காரணம் மாரிமுத்து வில்லனாக நடித்தாலும் அவருக்குள் ஒரு வெள்ளந்தி தனம் இருக்கும். குழந்தைகளும் கொண்டாடும் அளவுக்கு தான் அவரது கேரக்டர் இருந்தது. ஆனால் இப்போது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வேலராமமூர்த்தி இடம் அந்த பிளஸ் பாயிண்ட் இல்லை.
வெறும் வன்மத்தை மட்டுமே கக்கும் கதாபாத்திரமாகத் தான் அவரது பிரதிபலிப்பு இருக்கிறது. இதனால் எதிர்நீச்சல் தொடர் பிரியர்களுக்கு கூட இப்போது இந்த தொடரை பார்க்கும் ஆர்வம் இல்லை. கிட்டத்தட்ட 60% பேர் இப்போது இந்த தொடரை பார்ப்பதை நிறுத்தி விட்டனர்.
சிலர் எதிர்நீச்சல் தொடரை பார்க்க காரணம் அந்தத் தொடரில் நடிக்கும் மருமகள்கள் மட்டும் தான். மேலும் குணசேகரனாகவே வாழ்ந்த மாரிமுத்துவின் இறப்புக்குப் பிறகு ஒரு தொடரே அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது ஆச்சரியம் தான். ஏனென்றால் எதிர்நீச்சல் தொடரில் ஆணி வேராக குணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து வாழ்ந்திருக்கிறார்.