வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் போன்ற வீரர்களின் அதிரடி ஆட்டத்திற்கு எப்பொழுதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆரம்பத்தில் இருந்தே எதிரணி பவுலர்களை கொஞ்சம் கூட மதிக்காமலும் , பயம் அறியாமலும் மட்டையை சுழற்றி அதிரடி ஆட்டம் ஆட கூடியவர்கள்.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்த பிறகு பல வீரர்கள் 20 ஓவர் போட்டியில் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தேர்வாகியுள்ளார்கள். குறிப்பாக எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், சிவம் டுபே போன்ற வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர்.
பவுலர்களை சாகடிக்கும் இளம் புயல்
நடைமுறை காலங்களில் 20 ஓவர்களில் 300 ரன்கள் அடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவிற்கு இளம் அதிரடி ஆட்டக்காரர்கள் இந்தியாவில் பெருகி வருகின்றனர். நேற்றைய போட்டியில் 167 இலக்கை வெறும் 9.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி அடித்து துவம்சம் செய்து வெற்றி பெற்று விட்டார்கள்.
ஓப்பனிங் இறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் இருவரும் இணைந்து ரெக்கார்ட் வெற்றிச் சாதனையை பெற்றுக் கொடுத்துள்ளனர். அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். பயமே இல்லாமல் எதிரணி பவுலர்களை துவம்சம் செய்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 401 ரன்கள் குவித்துள்ளார்.குறிப்பாக இந்த போட்டிகளில் அனைத்தும் சேர்த்து அவருடைய டிரைக் ரேட் 205. எல்லா போட்டிகளையும் பயமே இல்லாமல் விளையாடியுள்ளார். அபிஷேக் சர்மாவிற்கு முழு சுதந்திரமும் பயிற்சியும் கொடுத்து உருவாக்கிக் கொண்டிருப்பவர் இந்திய அணியின் ஜாம்பவான் யுவராஜ் சிங் தான்.