இப்போது தமிழ் சினிமாவில் புது படங்களை காட்டிலும் ரீ ரிலீஸ் படங்கள் வசூலை அள்ளி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான கில்லி படம் ரீலீஸ் செய்யப்பட்டது. புது படங்களை காட்டிலும் இந்த படம் வசூலை அள்ளிக் குவித்தது.
அதேபோல் கமலின் ஆறு படங்களை இப்போது ரிலீஸ் செய்தாலும் வசூலை அள்ளும். ஆரம்பத்திலேயே ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று கமல் சொன்னார். ஆனால் அப்போது அதை பெரிதாக பலரும் என் கருத்தில் கொள்ளவில்லை.
ஆனால் தற்போது தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை விற்க ஓடிடி நிறுவனங்களை நாடி வருகிறார்கள். அதேபோல் கமல் நடிப்பில் வெளியான ஆறு படங்களை ரிலீஸ் செய்தால் இப்போதும் வசூலை அள்ளும். மணிரத்னம் கமல் கூட்டணியில் வெளியான நாயகன் படத்திற்கு இப்போதும் மவுசு அதிகம்.
ரீ ரிலீஸ் செய்தால் வசூலை அள்ளும் கமலின் 6 படங்கள்
அதேபோல் மகாநதி, குருதிபுனல், தேவர் மகன் படங்களுக்கும் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் சுந்தர் சி, கமல் கூட்டணியில் வெளியான அன்பே சிவம் படத்திற்கு அப்போது வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர்.
ஆகையால் அன்பே சிவம் படத்தையும் ரிலீஸ் செய்தால் வசூல் நன்றாக இருக்கும். மேலும் தியேட்டரில் பட்டையை கிளப்பிய வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தை புது பொலிவுடன் மீண்டும் தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள்.
மேலும் நடிகர் விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில் கமல் ஒரு தீர்க்கதரிசி. பிறகு என்ன நடக்கும் என்பதை முன்பே கணிக்க கூடியவர். அவர் சொல்லும் கருத்துக்கள் ஒவ்வொன்றிலும் பல அர்த்தங்கள் இருக்கும் என்று கூறினார்.