Simbu: கடும் பிரச்சனைகளுக்கு இடையே சிம்புவை இயக்கப் போகும் சைத்தான்.. மணிரத்தினத்துக்கு வந்த கடும் சோதனை

 5 வருடத்துக்கு முன் சிம்புவிற்கு ரெட் கார்டெல்லாம் கொடுத்தாங்க. ஆனால் அது நடைமுறையில் இருக்கா என்பது தான் தெரியவில்லை. அதாவது 2017  ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஏழு வருடத்திற்கு முன்பு சிம்பு நடித்த படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். அந்தப் படம் கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தியது.

 இந்த படத்தின் பிரச்சனையே இன்னும் முடிந்த பாடு இல்லை. அதன்பின் ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து கொரோனா குமார் என்ற ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதற்காக சிம்புவுக்கு அட்வான்ஸ் கொடுத்ததாகவும் கூறி இப்பொழுது பிரச்சனையை கிளப்பி வருகிறார்.

மணிரத்தினத்துக்கு வந்த கடும் சோதனை

ஆனால் இன்று வரை சிம்பு அந்த படத்தில் நடித்துக் கொடுக்கவில்லை. அதன் பிறகு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்து விட்டார். இப்பொழுது மணிரத்தினத்தின் தக் லைப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க கூடாது என்று ஐசரி கணேஷ் பிரச்சனை செய்து வருகிறார்.

 ஐசரி கணேஷ் பெப்சி இயக்கத்திடம் மனிதத்தனம் படத்திற்கு சப்போர்ட் செய்யாதீர்கள் என்று கூறி வருகிறார். ஆனால்  மணிரத்தினமோ கொரோனா காலகட்டங்களில் பெப்சி ஊழியர்களுக்கு நிறைய நல்ல உதவிகள் செய்து அவர்கள் குடும்பத்தை காப்பாற்றினார். இப்பொழுது யார் பக்கம் நிற்பது என  தர்ம சங்கடமான நிலையில் இருக்கிறார்கள் பெப்சி ஊழியர்கள்.

 இதற்கிடையில் சிம்பு நடிக்க, நடிகர் மாதவன் ஒரு படத்தை இயக்கப் போகிறார். சிம்பு  அந்தப் படத்திற்கு கால் சீட் கொடுத்துவிட்டார். ஏற்கனவே  சிம்புவிற்கு தடை போடுங்கள் என பல பிரச்சினைகள்  ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்பொழுது மாதவன் இயக்கும் படம் சரி வருமா என்று தெரியவில்லை.