20 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆனால் அதுவும் இந்த ஜூன் மாதத்தோடு முடிவடைகிறது. இப்பொழுது இந்திய அணிக்கு புது பயிற்சியாளர் தேடும் பணியில் தீவிரம் காட்டுகிறது பிசிசிஐ.
வி வி எஸ் லக்ஷ்மன்: இவருக்குத்தான் தான் இப்பொழுது நிறைய வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வழி நடத்திய அனுபவம் இவருக்கு இருக்கிறது. அசைக்க முடியாத ஒரு அனுபவம் கொண்டவர் லக்ஷ்மன். இந்திய அணி வீரர்களை நன்கு அறிந்த இவரால் நன்றாக வழி நடத்த முடியும்.
ஜஸ்டின் லாங்கர்: கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதில்லை. ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற முன்னாள் வீரர்கள் தான் இந்திய அணியை வழிநடத்தி செல்கின்றனர். அதனால் இவருக்கு வாய்ப்பு குறைவுதான் .
நிகில் சோப்ரா: டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர், ஆல் ரவுண்டராக இந்திய அணிக்கு செயல்பட்டார். போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் கூட இவரும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார். இவருக்கும் வாய்ப்புகள் மிக மிக குறைவு.
அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய அணி பல முக்கிய போட்டிகள் விளையாடுகிறது. 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2027 அடுத்த உலகக் கோப்பை போட்டி, 2016 மற்றும் ஒரு உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி, தகுதி பெற்றால் சாம்பியன்ஸ் டிராபி என விளையாட இருப்பதால் திறமையும் அனுபவமும் வாய்ந்த பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது