பட வாய்ப்பே இல்லாத ஆண்ட்ரியாவின் சொத்து மதிப்பு.. சுசித்ரா சொன்ன கப்சிப் ரகசியம்

Andrea Net worth: பாடகியாக அறிமுகமாகி பின் சினிமாவில் ஹீரோயின், கௌரவத் தோற்றம், செகண்ட் ஹீரோயின் என ஒரு ரவுண்டு வந்தவர் ஆண்ட்ரியா. இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் சற்று குறைவுதான். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தமிழ் படங்களில் இவர் தலை காட்டவில்லை.

பல சர்ச்சைகளில் சிக்கிய ஆண்ட்ரியா படிப்படியாக சினிமாவில் கேரியரை தொலைத்தார். 2017 ஆம் ஆண்டு சுசித்ரா வெளியிட்ட சுசி லீக்சில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார். மிக இளம் வயது இசையமைப்பாளர் உடன் இவர் இருக்கும் நெருக்கமான புகைப்படம் ஒன்று வெளியாகி இவர் பெயரை கெடுத்து குட்டிச்சுவராக்கியது.

நண்பி சுசித்ரா சொன்ன கப்சிப் ரகசியம்

இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த “அனல் மேலே பனித்துளி”. அதன் பிறகு இந்த ஆண்டு தெலுங்கு படம் “சைந்தவையில்” நடித்துள்ளார். தமிழில் பிசாசு 2 படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார். சுந்தர் சி யின் அரண்மனைக்கு பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும் படி படங்கள் இல்லை.

பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் முன்பு இவர் நடித்தும், பாடியும் சம்பாதித்த சொத்துக்களை கட்டி காப்பாற்றி வருகிறார். சமந்தா குத்தாட்டம் போட்ட “ஊ சொல்றியா மாமா” பாடல் ஆண்ட்ரியா பாடியதுதான்.

சுசித்ரா சொன்ன முக்கியமான மூணு குற்றச்சாட்டு:

இத முடிச்சிட்டு அடுத்து ஆண்ட்ரியாவிடம் மொத்தம் 25 கோடிகள் சொத்து இருக்கிறது. அது மட்டும் இன்றி அவரின் தோழி சுசித்ரா தற்சமயம் இவரைப் பற்றிய ரகசியங்களை புட்டு புட்டு வைக்கிறார். இவர் அலமாரியில் 200 வைர நகைகளை இருக்கிறது, இவரிடம் மினி கூப்பர் கார் ஒன்றும் இருக்கிறது என்றெல்லாம் இவருடைய பர்சனல் வாழ்க்கையின் ரகசியங்களை யூ ட்யூப் சேனல்களில் போட்டு உடைத்து வருகிறார்.