செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அதிக தேசிய விருதுகளை வாங்கி குவித்த 7 நடிகர்கள் மற்றும் படங்கள்.. கமல் போல் குட்டு வாங்கியே ஜெயித்த அரக்கன்

நடிப்பில் தேசிய விருது வாங்குவது ஒவ்வொரு நடிகனுடைய கனவு, இலட்சியம். அப்படி வாழ்க்கையை சினிமாவிற்காக அற்பணித்து முழு முயற்சியையும், திறமையையும் காட்டி 7 நடிகர்கள் வாங்கிய தேசிய விருதுகள். இதில் யார் அதிக முறை வாங்கியுள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.

அமிதாப்பச்சன்: கிட்டத்தட்ட 40 வருட கலைப்பணியில் அமிதாப்பச்சன் நான்கு முறை தேசிய விருதை வாங்கி குவித்துள்ளார். அமிதாப் இந்த 4 படங்களுக்கும் சிறந்த நடிப்புக்காக வாங்கியுள்ளார்,

அக்னி பாத்
பிளாக்
பிகு
பா

மம்மூட்டி: உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளார் மம்மூட்டி. மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ஆன இவர் மூன்று முறை தேசிய விருது வாங்கியுள்ளார. மொத்தமா 3 படங்களுக்கு விருது வாங்கியுள்ளார்,

மதிளுகள்
பொந்தன் மட
டாக்டர் பாபா ஷாப் அம்பேத்கர்

கமலஹாசன்: 7 வயதில் இருந்து நடித்துக் கொண்டிருக்கிறார் இன்று அவருக்கு வயது எழுபது. 63 கால சினிமா வாழ்க்கையில் மூன்று முறை வாங்கி உள்ளார். கமல் இந்த 3 படங்களுக்கு நேஷனல் அவார்ட் வாங்கியுள்ளார்,

மூன்றாம் பிறை
நாயகன்
தேவர் மகன்

கமல் போல் குட்டு வாங்கியே ஜெயித்த அரக்கன்

தனுஷ்: ஆரம்பத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என ஏளனம் செய்தவர்களுக்கு தற்போது நடிப்பில் சரியான பதிலடி கொடுத்து வருகிறார். தனுஷ் 3 முறை நேஷனல் அவார்ட் வாங்கி இருக்கிறார். இரண்டு முறை நடிப்புக்காகவும் ஒரு முறை தயாரிப்புக்காகவும்.

ஆடுகளம்
அசுரன்
காக்கா முட்டை (தயாரிப்புக்காகவும் )

இவர்களை தவிர ஹிந்தியில் தலா இரண்டு முறை விருது வாங்கிய ஹீரோக்களை கீழே பார்க்கலாம்,

அஜய் தேவ்கன்
நசுருதீன் சா
மிதுன் சக்கரவர்த்தி

Trending News