திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

ஷாருக்கான் செல்லப்பிள்ளை ஷ்ரேயாஸ் ஐயரின் சொத்து மதிப்பு.. ஐபிஎல் போட்டிகளால் நிரம்பி வழியும் கஜானா

மும்பையை பூர்வீகமாக கொண்டவர் ஷ்ரேயாஸ் ஐயர், 2014 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடினார். 2015-16 ஆம் ஆண்டுகளில் மும்பை அணிக்காக விளையாடி ஆயிரம் ஆண்களுக்கு மேல் குவித்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில அதிரடி காட்டி ரஞ்சி போட்டிகள் மற்றும் இந்திய அணியிலும் இடம் பெற்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியின் மூலமாக டி20 தொடரில் அறிமுகமானார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக களம் கண்டார்.

இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர், சமீபத்தில் பிசிசிஐ பி கிரேடு ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், அதற்கு முன்னதாக 2022-2023 ஆம் ஆண்டுகளில் பி கிரேடு மூலமாக ஆண்டுக்கு ரூ. 4 கோடி வரை இவருக்கு கிரிக்கெட் போர்டு சம்பளம் கொடுத்து வந்தது.

ஐபிஎல் போட்டிகளால் நிரம்பி வழியும் கஜானா

2015 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக ரூபாய் 2 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டார். அதன்பின் கொல்கத்தா அணி அவரை 12 கோடிக்கு ஏலம் எடுத்தது. தற்போது அந்த அணியின் கேப்டனாகவும் இடம் பெற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் மூலமாக ரூபாய் 30 கோடிகள் வரை சம்பாதிக்கிறார்.

மும்பையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு சொந்தமாக 9 கோடி மதிப்பில் வீடு ஒன்று இருக்கிறது அது மட்டுமின்றி ரூ. 2 கோடி மதிப்பில் மெர்சிடஸ் பென்ஸ், லம்போர்கினி மற்றும் ஆடி கார்களையும் வைத்திருக்கிறார். இதுபோக இவரிடம் விலகி உயர்ந்த பைக்குகளும் இருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் ஷாருக்கானின் செல்லப் பிள்ளையாக வலம் வரும் ஷ்ரேயாஸ் ஐயரிடம் 120 கோடிகள் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. ஐபிஎல் கோப்பையை வென்றதன் மூலம் இந்த ஆண்டு கே கே ஆர் அணிக்கு மட்டும் 20 கோடிகள் பரிசுதொகை கிடைத்திருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News