சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 5- 6, டி20 உலகக் கோப்பைகள் விளையாடி இதுவரை கோப்பையை இந்திய அணிக்கு பெற்று தரவில்லை.
இன்று தொடங்கவிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை முதல் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. அமெரிக்காவில் இந்த போட்டி நடைபெறுவதால் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் புயலான எஸ் எஸ் வி ஜெய்ஸ்வாலை அணியிலிருந்து ஓரங்கட்ட முடிவு செய்துள்ளனர்.
இந்திய அணியில் மூத்த வீரர்கள் ஆன விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மா 20 ஓவர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் தான் இளம் வீரனான ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றம் சாட்டியுள்ளார். பழைய ரெக்கார்டை வைத்து இருவர்களையும் அணியில் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
ஆதங்கத்தை கொட்டி தீர்த்த மஞ்ச்ரேக்கர்
அவர்கள் இதுவரை உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்று தந்தது கிடையாது. 2022ஆம் ஆண்டு 20 ஓவர்உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் இந்திய அணி இனி வரும் போட்டிகளில் இளம் வீரர்களை மட்டும்தான் வைத்து விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்தது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஓராண்டுகள் 20 ஓவர் அணியில் இடம்பெறவே இல்லை ஆனால் தற்போது மீண்டும் இடம் கொடுத்துள்ளனர். ரோகித் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்படுகிறார். அவருடன் விராட் கோலி ஓப்பனாராக களம் இறங்குவார் எனவும் பேசப்படுகிறது.
இப்படி இருக்கும் பட்சத்தில் எஸ் எஸ் வி ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறிதான். மிகவும் அதிரடியாக ஆடக்கூடிய இவர் அணியில் இடம் பெற வேண்டும், இவருக்கு மூத்த வீரர்களால் அநீதி இழைக்கப்படுகிறது. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் அதிரடி காட்டும் இளம் வீரர்கள் போட்டியாக மாறி வருகிறது. அதனால் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற வேண்டும் என மஞ்ச்ரேக்கர் குமுறி வருகிறார்