Actor Kamal: டாப் ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வரும் லைக்காவுக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரியில்லை. கடுமையான நிதி நெருக்கடிக்கு இந்த நிறுவனம் ஆளாகி இருக்கிறது.
மணிரத்னத்துடன் இணைந்து இவர்கள் தயாரித்த பொன்னியின் செல்வன் ஏகப்பட்ட லாபத்தை கொடுத்தது. அதனாலயே இவர்கள் சந்திரமுகி 2, லால் சலாம் போன்ற படங்களை அதிக பட்ஜெட்டில் எடுத்தனர்.
ஆனால் அது நஷ்டத்தை தான் கொடுத்தது. முன்னதாக இந்தியன் 2 வருட கணக்கில் இழுத்தடித்து வந்ததும் லைக்காவுக்கு கடுமையான நிதி நெருக்கடியாக அமைந்தது. இப்படம் கிட்டத்தட்ட ஏழு வருட போராட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
கமலின் கட்டாயத்தின் காரணமாக லைக்கா காசை செலவழித்து வந்த நிலையில் சில மனக்கசப்பும் இவர்களுக்குள் ஏற்பட்டது. அதன் பிறகு ரெட் ஜெயன்ட் உள்ளே வந்து பிரச்சனையை தீர்த்து வைத்ததோடு படமும் இப்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
ஏழு வருட போராட்டம்
அதே நேரத்தில் லைக்காவின் மற்ற தயாரிப்பு படங்களான விடாமுயற்சி, வேட்டையன், மலையாளத்தில் L2 யம்புரான் ஆகிய படங்களும் சில பண சிக்கல்களை சந்தித்தது. அதில் விடாமுயற்சி எப்போது ரிலீஸ் ஆகும் என்பது பெரும் கேள்விக்குறி தான்.
அதேபோல் மோகன்லால் நடிப்பில் உருவாகும் மலையாள படமும் சில வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஆனால் இப்படத்திற்கும் சில நிதி நெருக்கடி இருக்கிறது. தற்போது இந்தியன் 2 ரிலீஸ் ஆகி லாபம் பார்க்கும் நிலையில் மற்ற படங்களின் பிரச்சனையும் சரியாகிவிடும் என்கின்றனர்.
ஆக மொத்தம் ஆண்டவரை நம்பி களத்தில் குதித்த லைக்கா இன்னும் தத்தளித்து கொண்டு தான் இருக்கின்றது. இந்தியன் 2 அதை மீட்டெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.