Collection of Kalki: கல்கி படம் வெளியிட்ட தியேட்டர்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கிறது. படம் நல்லா இல்லை என்ற விமர்சனமே எல்லா பக்கமும் காட்டுத் தீ போல் பரவி உள்ளது. இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு வந்த நிலையில் நமத்து போன பட்டாசு போல் மாறிவிட்டது.
பிரபாஸ், அமிதாப்பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோனே என பெரிய நடிகர் பட்டாளங்களுடன் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் கல்கி. ஆனால் இந்த படம் மொத்தமாய் மக்களை திருப்தி அடையாமல் செய்துவிட்டது.
720 கோடிகள் பட்ஜெட்டில் உருவான இந்த படம் இப்பொழுது ஓரளவு வசூலித்து தயாரிப்பாளரை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறிருக்கிறது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுத்து விட்டோம், படம் கைகொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் மனவேதனையில் இருந்தார்.
கல்கி பட குழுவையே ஆச்சரியப்படுத்திய கலெக்ஷன்
ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமைகளை பெரும் தொகைக்கு விற்று விட வேண்டும் என எண்ணிய தயாரிப்பாளர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை கொடுத்தது. ஆரம்பத்தில் தியேட்டர் விநியோகஸ்தர்களில் இருந்து அமேசான், நெட்ப்ளிக்ஸ் என படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை.
இப்பொழுது கல்கி படம் உலக அளவில் 510 கோடிகள் வசூல் வேட்டை ஆடி உள்ளது. படம் முதலில் 3டியில் வெளியாகும் என சொன்னார்கள் ஆனால் இப்பொழுது 2 டியில் மட்டுமே வெளியிட்டுள்ளனர். இன்னும் மெருகேற்றி வர போகும் காலத்தில் வெளியிட்டு போட்ட மொத்த பட்ஜெட்டையும் எடுத்து விடுவார்கள் போல்
- ஒர்க் ஃப்ரம் ஹோம் வில்லன், டம்மி ஹீரோ
- விஜய்யை கடைசியில் தள்ளிய கல்கி பைரவா
- கமல், பிரபாஸின் விஷுவல் ட்ரீட் ஒர்க் அவுட் ஆனதா.?