வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

உலகக் கோப்பையில் எந்த நாடும் செய்யாததை செய்த இந்தியா.. நம்பர் ஒன் ஆஸ்திரேலியா கூட இன்னும் பண்ணல

2024 T20 உலகக் கோப்பையில் இந்தியா இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது .2007ஆம் ஆண்டு முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட 20 ஓவர் போட்டி உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து இப்பொழுது மீண்டும் கைப்பற்றி உள்ளது.

இந்தியாவைத் தவிர இரு முறை கோப்பையை கைப்பற்றி உள்ள மற்றொரு அணி வெஸ்ட் இண்டீஸ் தான். மூன்று முறை பைனல் சென்ற இந்திய அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. ஒரு முறை 2014 ஆம் ஆண்டு இலங்கையுடன் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது.

நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிகள் இதுவரை 20 உலக கோப்பையை வென்றதுஇல்லை. பெரிய ஜாம்பவானாக விளங்கி வரும் நியூசிலாந்து அணி 2021 ஆம் ஆண்டு இறுதி போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

எப்பொழுதுமே லீக் போட்டிகளில் அசத்தும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு அரையிறுதி இறுதிப்போட்டி என்றால் சில நடுக்கங்கள் ஏற்பட்டு விடும். கிரிக்கெட் ஆரம்பித்த காலத்தில் இருந்து முக்கியமான வாழ்வா சாவா, நாக் அவுட்போட்டிகளில் கோட்டை விட்டுவிடுவார்கள்.

நம்பர் ஒன் ஆஸ்திரேலியா கூட இன்னும் பண்ணல

இந்த ஆண்டுதான் அரை இறுதி போட்டியில் எளிதாக வெற்றி பெற்றார்கள் தென் ஆப்பிரிக்கா. ஆப்கானிஸ்தான் அணி தட்டு தடுமாறி செமி பைனலுக்குள் நுழைந்தது. 56 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து எளிதாக தோற்றது ஆப்கானிஸ்தான் அணி.

இதுவரை உலக நாடுகள் எதுவுமே செய்யாத சாதனையை இந்திய அணி செய்துள்ளது. உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டிகள் கூட தோற்காமல் கைப்பற்றிய ஒரே அணி என்றால் அது இந்திய அணி தான். ஏன் நம்பர் ஒன் ஆஸ்திரேலியா அணி கூட இன்னும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை.

- Advertisement -spot_img

Trending News