பருத்திவீரன் கார்த்திக்கு ஜப்பான் படத்திற்குப் பிறகு எந்த படமும் வெளிவரவில்லை. வா வாத்தியார், மெய்யழகன், சர்தார் 2 ஆகிய மூன்று படங்களில் தற்சமயம் நடித்து வருகிறார். விருமன் சர்தார் படத்திற்குப் பிறகு இவருக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை.
2022 ஆம் ஆண்டு வெளிவந்த சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் இப்பொழுது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் எடுத்து வருகின்றனர். ஜூலை 15ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தில் தான் இப்பொழுது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சர்தார் 2 படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே ஸ்டாண்ட் கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டதால் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
சூப்பர் ஹிட் படம் ஆரம்பிக்கும் போதே ஏற்பட்ட அசம்பாவிதம்
ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து மரணித்துள்ளார். கீழே விழுகையில் மார்பில் அடிபட்டு நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் தான் மரணம் அடைந்தார் என மருத்துவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர்.
கார்த்தி மற்றும் படக்குழுவினர் மறைந்த ஏழுமலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இந்த கேஸ் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே நடைபெற்ற இந்த விபத்தால் மொத்த கோடம்பாக்கம் திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.