செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

விவாகரத்து பெற்ற 5 இந்திய கிரிக்கெட் பிளேயர்ஸ் . பிளேபாய் ஆட்டம் போட்டு வாழ்க்கையை இழந்த 2 நட்சத்திர வீரர்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நடிகைகளும் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது 70-80களில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் திருமண உறவை விட்டுவிட்டு விவாகரத்து பெறுவது வழக்கமான ஒன்றுதான். அப்படி காதலித்து விவாகரத்து பெற்ற 5 கிரிக்கெட் வீரர்கள்

ஷிகர் தவான்: ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தவான். மெல்போன் நகரத்தைச் சேர்ந்த முகர்ஜி, தவானை விட 10 வயது பெரியவர். மிகவும் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் திடீரென விவாகரத்து முடிவை அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

முகமது சாமி: இந்திய நட்சத்திர பவுலராக வலம் வந்த இவர் 2014ஆம் ஆண்டு ஹாஸின் ஜஹாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அதன்பின் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லி இவரது மனைவி இவரை விவாகரத்து செய்தார். இதன் மூலம் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் முகமது சமி.

ஹார்திக் பாண்டியா: செர்பியா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி நடாஷா சேன்கோவிச்சை காதலித்து திருமணம் செய்தார் ஹார்திக் பாண்டியா. நான்கு வருட திருமண பந்தம் கசந்து தற்போது விவாகரத்து பெற்றுள்ளனர். இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

பிளேபாய் ஆட்டம் போட்டு வாழ்க்கையை இழந்த 2 நட்சத்திர வீரர்கள்

அசாருதீன்: 90 களிலேயே இந்திய அணியில் பிளேபாயாக ஆட்டம் போட்டு வந்தார் முகமது அசாருதீன். 1987ஆம் ஆண்டு நாரின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானியுடன் டேட்டிங் உறவில் இருந்தார் இதனால் இவரது மனைவி இவரை விவாகரத்து செய்தார்.

தினேஷ் கார்த்திக்: 2007 ஆம் ஆண்டு நிகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் தினேஷ் கார்த்திக். அதன் பின்னர் தினேஷ் கார்த்திக்கின் நண்பரான முரளி விஜய் மீது காதலில் விழுந்தார் நிகிதா. தினேஷ் கார்த்திகை விவாகரத்து செய்து முரளி விஜயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நிகிதா.

- Advertisement -spot_img

Trending News