Kamal: கமலுக்கு விக்ரம் படத்தின் மூலம் கிடைத்த வெற்றியும் வரவேற்பும் துவண்டு போய் இருந்த உலக நாயகனை மறுபடியும் தூக்கி விட்டது. அதிலும் வசூல் அளவில் பெருத்த லாபம் என்று சொல்வதற்கு ஏற்ப தயாரிப்பாளராகவும் ஜெயித்து விட்டார். அதனால் ஒரு பக்கம் நடிப்பிலும், இன்னொரு பக்கம் தயாரிப்பிலும் லாபத்தை பார்க்க வேண்டும் என்று மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்தடுத்து வெளிவர இருக்கும் தக் லைஃப், கல்கி 2 மற்றும் இந்தியன் 3 படத்தின் மூலம் மறுபடியும் வெற்றியை பார்த்து விட வேண்டும் என்று தீயாக வேலை பார்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமான கமல் மற்றும் சோனி பிக்சர்ஸ் சேர்ந்து தயாரித்து வருகிறார்கள்.
கமல் மனசாட்சியை உறுத்திய அந்த விஷயம்
இப்படம் முழுக்க முழுக்க மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் பயோபிக் கதையாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிவகார்த்திகேயனின் நடிப்பும் காட்சிகளும் வேற லெவல் என்று சொல்வதற்கு ஏற்ப வித்தியாசமான நடிப்பை கொடுத்து வருகிறார். அந்த வகையில் மேஜர் முகுந்து வரதராஜன் உண்மைக் கதையை சொல்லும் விதமாக ஒரிஜினல் ஃபுட்டேஜ் வைத்து படத்தை கொண்டு வருகிறார்கள்.
முழுக்க முழுக்க இது அவருடைய கதையும் அவர் சம்பந்தமான காட்சிகளும் அதிகமாக இடம்பெறுவதால் அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அந்த குடும்பத்திற்கு ஏதாவது ஒன்னு பண்ண வேண்டும் என்று கமலுக்கு மனசாட்சி உறுத்தி இருக்கிறது. அதனால் கஞ்சத்தனத்தின் முதல் உருவமாக இருக்கும் கமல், முதல் முறையாக மேஜர் முகுந்து வரதராஜன் குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
அதனால் அவர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாயை வம்படியாக கொடுத்திருக்கிறார். முதலில் கமல் பணத்தை கொடுக்கும் பொழுது அந்த குடும்பம் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் கமல் இது உங்களுக்கு சேர வேண்டிய நியாயமான பணம்தான். இதை நீங்கள் வாங்கினால் மட்டும்தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும். இல்லையென்றால் என் மனசாட்சி என்னை படுத்தி எடுத்து விடும் என்று வலுக்கட்டாயமாக கொடுத்திருக்கிறார்.
கஞ்சத்தனத்தில் தருமிதாசனையே மிஞ்சும் அளவிற்கு இருந்த உலக நாயகன் முதல் முறையாக மனசாட்சிப்படி நடந்திருக்கிறார். இப்பொழுதுதான் ஆண்டவருக்கே நிம்மதி என்று சொல்வதற்கு ஏற்ப பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இப்படம் முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் ஒவ்வொன்றாக நடைபெற இருக்கிறது.
மேலும் இப்படத்தை சுமார் 150 கோடி முதல் 200 கோடி வரை செலவு செய்து படமாக்கி இருக்கிறார்கள். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.
அமரன் படத்தை வெற்றியாக்க போராடும் ராஜ்கமல் பிலிம்ஸ்
- யானை வாய்க்கு சோளப்பொரி கொடுத்த ஒடிடி
- வாலைச்சுருட்டி கொண்டு கப்சிப் ஆன சிவகார்த்திகேயன்
- அமரன் ரிலீசுக்கு நாள் குறித்த படக்குழு