இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி T20 போட்டி தொடரை 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று இலங்கை அணியை ஒயிட் வாஸ் செய்தது. புது பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா அளித்த உத்வேகத்தோடு களமிறங்கிய அந்த அணிக்கு இது மேலும் பின்னடைவாக அமைந்தது.
இப்பொழுது அந்த அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சீனியர் வீரர்களாகிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒரு நாள் அணிக்கு திரும்பி உள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இந்தியாவை இலங்கை அணி வெல்வது மிகவும் கடினம். ஏற்கனவே இருவது ஓவர் கோப்பையை இழந்துவிட்டனர். இப்பொழுது இந்திய அணிக்கு ஐந்து நட்சத்திர வீரர்கள் திரும்பி உள்ளதால் ஒருநாள் தொடரை இலங்கை வெல்லும் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது.
இலங்கையை துவம்சம் பண்ண வந்த ஐந்து பேர்
இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் போன்ற ஐந்து சீனியர் வீரர்கள் அணிக்குள் திரும்பி உள்ளனர். இவர்களை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும்.
சுமார் ஆறு மாத காலத்திற்குப் பிறகு இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விளையாடி வெற்றி பெற்றனர். புது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் விளையாடும் முதல் போட்டி இது.
20 ஓவர் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட சூரியகுமார் யாதவை ஒரு நாள் போட்டியில் பெஞ்சுக்கு அனுப்பியுள்ளது இந்திய அணி. அவரை தொடர்ந்து இளம் புயல் எஸ்.எஸ்.வி ஜெய்ஸ்வாலும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். இவர்கள் தொடர்ந்து T20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது