ஒரு பக்கம் கமல் தக்லைஃப் படத்தில் பிஸியாக இருக்கிறார். மறுபக்கம் விஜய் டிவி அவரை பிக் பாஸ் சீசன் 8க்கு வலை விரித்து வருகிறது. கமல் தொடர்ந்து, ஒருவரே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சுவாரஸ்யம் இருக்காது என இதிலிருந்து விலகி வருகிறார்.
கமலுக்கு ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்காக 100 கோடிகள் சம்பளம் கொடுத்திருந்தது விஜய் டிவி. ஆனால் அந்த சலுகைகளை எல்லாம் கமல் இப்பொழுது ஏற்க முடியாத இடத்தில் இருக்கிறார். அரசியல், சினிமா, தயாரிப்பு என மூன்று இடத்திலும் பிசியாக இருக்கிறார்.
கமல் தக்லைஃப் படம் சூட்டிங் முடிந்த கையோடு அமெரிக்கா செல்கிறார். அங்கே 6 மாதங்கள் படித்துக் கொண்டே ஓய்வு எடுக்கிறார். இப்பொழுது சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஏ ஐ தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கிறார் கமல். இதற்காகத்தான் இந்த ஆறு மாதம் சினிமாவிற்கு இடைவெளி.
கமல், ரஜினிகாந்த் போன்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் கலைஞர்களால் மட்டும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் பெயர் கிடைக்கும் என்று விஜய் டிவி எதிர்பார்த்து வருகிறது.
விஜய் டிவி குறிவைக்கும் ஏடாகூடமான ஆளு
எல்லா மொழிகளையும் விட தமிழில் தான் இது சக்சஸ்ஃபுல்லாக சென்றது. ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கியபோதிலும் தமிழில் தான் இது 7 சீசன்கள் சக்சஸ்ஃபுல்லாக போனது. சிம்புவும் இதற்கு சரிப்பட்டு வர மாட்டார் என விஜய் டிவி வேறு ஒருவரை குறி வைக்கிறது.
போட்டியாளர்களை விட தொகுத்து வழங்குபவர்களுக்கு வயது அதிகமாக இருந்தால்தான் இந்த நிகழ்ச்சிக்கு சரியாக இருக்கும் என்று சிம்புவையும் நிராகரித்துள்ளது விஜய் டிவி. இப்பொழுது அதற்காக இயக்குனர் பார்த்திபன் இந்த நிகழ்ச்சிக்கு சரி வருவாரா என டீல் பேசி வருகிறது. அவர் கிடுக்கு பிடி கேள்வி கேட்பதில் வல்லவர். அவர் பிக் பாஸ் 8 சீசனுக்கு செட்டாவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
- பிக் பாஸ் சீசன் 8யில் கலந்து கொள்ளும் 9 போட்டியாளர்கள்
- கவினை போல பிக் பாஸ் ராஜுக்கு அடித்த ஜாக்பாட்
- ஹீரோயினாக களமிறங்கும் பிக் பாஸ் சீசன் 7 நடிகை.