கனத்த இதயத்துடன் பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார் கமல். மூன்று காரணங்களுக்காக விலகி உள்ளதாக இப்பொழுது விஜய் டிவி தரப்பில் இருந்து கூறப்படுகிறது. கமல் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
கமல் தற்போது நடித்து முடித்த படம் கல்கி, நடித்துக் கொண்டிருக்கும் படம் தக்லைப், நடிக்கப் போகும் படம் அன்பறிவு மாஸ்டர்கள் இயக்கும் படம். கல்கி இரண்டாம் பாகம் மற்றும் அன்பறிவு படம் என அடுத்தடுத்து பிடிக்கவிருக்கிறார். இந்த மூன்று காரணத்திற்காகவும் தான் கமல் பிக் பாஸ் வேண்டாம் என விலகி விட்டார்.
மற்ற மொழிகளை விட தமிழில் மட்டும் தான் பிக் பாஸ் செம ஹிட் ஆனது. இதற்கு காரணம் கமல், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது தான். கமலின் அனுபவம், திறமை, விட்டுக் கொடுக்காத நேர்மையான பேச்சு என அனைத்திலும் பிரித்து மேய்பவர் கமல். அவரால் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு சக்சஸ்ஃபுல்லாக நடந்தது.
இப்பொழுது கமல் விலகியதால் மூன்று பேருக்கு விஜய் டிவி வலை விரித்து வருகிறது. ஆனால் கமல் போல் வேறு யாராலும் இந்த அளவு சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே.
விஜய் டிவி அணுகிய 4 பேர்
சூர்யா: இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் டிவி சூர்யாவிடம் அணுகியுள்ளது. ஆனால் வெளிப்படையாக சூர்யா மறுத்துவிட்டார். ஒரு பெரும் தொகையை கூட காட்டி விஜய் டிவி ஆசையை கிளப்பியுள்ளது. தொடர்ந்து படங்களில் நடிப்பதால் சூர்யா வேண்டாம் என மறுத்துள்ளார்
சிம்பு: இரண்டாவதாக விஜய் டிவி ரூட் போட்டது சிம்புவுக்கு தான். சிம்பு இதில் டபுள் மைண்டில் இருக்கிறார். இப்பொழுது தான் அவருக்கு படங்கள் கைக்கூடி வருகிறது. படங்களில் நடிக்கும் வாய்ப்பே போதும் விட்டு விட வேண்டாம் என யோசிக்கிறார். அதனால் அவரும் பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்து விட்டார்.
விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன்: அனேகமாக விஜய் சேதுபதி இதை கையாளுவார் என்று தெரிகிறது. விஜய் சேதுபதி ஒரு குறிப்பிட்ட நாளையும், நேரத்தையும் ஒதுக்கிவதாக விஜய் டிவியிடம் பேசி வருகிறார்.அவர் இல்லாத பட்சத்தில் இயக்குனர் பார்த்திபனிடமும் பேசி வருகிறது விஜய் டிவி.