சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிக்பாஸ் 8க்கு பெத்த கையை வளைத்த விஜய் டிவி.. கஜானாவை பதம் பார்த்து ஹீரோ போட்ட அக்ரீமெண்ட்

கமல் பிக் பாஸ் 8 சீசனில் இருந்து விலகியதால் சிம்பு, சூர்யா, சரத்குமார் என நேம் லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. இதில் ஏற்கனவே அனுபவம் உள்ள சரத்குமார் தான் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவியது.

இப்பொழுது இந்த சீசனுக்கு விஜய் டிவிக்கு தொகுத்து வழங்க நடிகர் கிடைச்சாச்சு. அந்த நடிகரும் பல கண்டிஷன்கள் உடன் அக்ரிமெண்ட் போட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் சீசனில் இருந்து இப்பொழுது ஏழாவது சீசன் வரை கமல் தொகுத்து வழங்கியுள்ளார்.

பிக் பாஸ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பப்படுகிறது. ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 17 சீசன் வரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

பெத்த தொகையை பேசி அக்ரிமெண்ட் போட்ட ஹீரோ

இப்பொழுது இந்த எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்குண்டான அக்ரிமெண்ட்டை விஜய் டிவி போட்டுள்ளது. விஜய் சேதுபதியும் பல கண்டிஷன்களை போட்டு டஃப் கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு 40 கோடிகள் வரை சம்பளம் பேசி இருக்கிறார்கள். வாரத்துக்கு இரு நாள் என்பதால் தான் இதற்கு விஜய் சேதுபதி சம்மதித்துள்ளார். மற்றபடி பட சூட்டிங் நாட்களில் அவரை தொந்தரவு பண்ணக்கூடாது என்றும் பல நிபந்தனைகள் வைத்துள்ளார்.

- Advertisement -

Trending News