புதன்கிழமை, ஜனவரி 15, 2025

2024 இல் 100 கோடி கிளப்பில் இணைந்த 5 படங்கள்.. தங்கலானால் பின்னுக்கு தள்ளப்படும் இந்தியன் 2

Indian 2: 2024 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் சினிமாவுக்கு பெரிய அளவில் வெற்றிகள் எதுவும் கொடுக்காமல் இருந்தது. இப்போது தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வருடம் தொடங்கி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆன நிலையில் 100 கோடி வசூலில் இணைந்த படங்களின் லிஸ்ட் இப்போது பார்க்கலாம்.

அந்த வகையில் இந்த வருடம் முதல் ஆறுதலாக அமைந்த படம் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் தான். முதல் வெற்றியை கொடுத்த இந்த படம் வசூலிலும் பண்டைய கிளப்பியது. அதன்படி 100.50 கோடி வசூலை அள்ளி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக தனுஷின் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் 100 கோடியை தாண்டியது. அதனால் இந்த படம் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இதை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் இருக்கிறது.

2024 இல் 100 கோடி வசூல் செய்த 5 படங்கள்

இப்படம் கிட்டத்தட்ட 107 கோடி வசூலித்திருந்தது. இந்நிலையில் இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் என்றால் இந்தியன் 2 தான். ஆனால் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யாத காரணத்தினால் எதிர்பார்த்த வசூலும் பெறவில்லை.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த படம் 148 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் சமீபத்தில் வெளியான தனுஷின் ராயன் படம் பிடித்திருக்கிறது. இந்த படம் 153 கோடி வசூலித்திருந்தது. இப்போது விக்ரமின் தங்கலான் படம் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். ஆகையால் இப்படம் வெளியான 2 நாட்களில் கிட்டத்தட்ட 50 கோடியை தாண்டி இருக்கிறது. ஆகையால் மிக விரைவில் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணைய உள்ளது. தங்கலான் வருகையால் ராயன் மற்றும் இந்தியன் 2 அடுத்த நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது.

சம்பவம் செய்யும் தங்கலான்

Trending News