This Week Theater OTT Release Movies: கடந்த வாரம் தங்கலான், டிமான்டி காலனி 2, ரகு தாத்தா ஆகிய படங்கள் சுதந்திர தின ஸ்பெஷலாக வெளிவந்தது. அதில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் மாபெரும் வெற்றி பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதை அடுத்து இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை பற்றி காண்போம்.
தியேட்டரை பொறுத்தவரையில் தமிழில் இந்த வாரம் இரண்டு படங்கள் வெளியாகிறது. அதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை 23ஆம் தேதி வெளி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த இரண்டு படங்களின் ட்ரெய்லரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து தற்போது பிரமோஷனும் ஜோராக நடந்து வருகிறது.
அடுத்தபடியாக டிஜிட்டலை பொறுத்தவரையில் இந்த வாரம் 7 படங்கள் வெளியாகிறது. அதில் பிரபாஸ், கமல், அமிதாப்பச்சன் கூட்டணியில் வெளிவந்த கல்கி 1100 கோடிகளை தட்டி தூக்கியது அப்படம் நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.
இந்த வாரம் வெளியாகும் படங்கள்
ஹிந்தி மொழியில் இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் மலையாள படமான Grrr டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் தற்போது வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 24ஆம் தேதி ஹிந்தி படமான முஞ்சியா ஸ்டார் கோல்டு இந்தியா தளத்தில் வெளியாகிறது.
மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்து 100 கோடிகளை தாண்டி வசூலித்த ராயன் அமேசான் பிரைம் தளத்தில் 23ஆம் தேதி வெளியாகிறது. அதேபோல் நகுல் நடிப்பில் வெளியான வாஸ்கோடகாமா அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.
இதைத்தொடர்ந்து தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை மையப்படுத்தி வெளியான ஜமா அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் வெளியாகிறது. இப்படியாக இந்த வாரம் மேற்கண்ட படங்கள் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது.
இதில் பேச்சி, யோகி பாபு நடிப்பில் வெளியான போட், பார்த்திபனின் டீன்ஸ், நண்பன் ஒருவன் வந்த பிறகு போன்ற படங்களும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இதன் ஓடிடி ரிலீஸை ஆடியன்ஸ் தற்போது எதிர்பார்த்து வருகின்றனர்.
வார இறுதியை மகிழ்விக்க வரும் படங்கள்
- அக்டோபர் 10 நேருக்கு நேர் மோதும் கங்குவா, வேட்டையன்
- 2024ல் டாப் 10 படங்களின் கலெக்ஷன் ரிப்போர்ட்
- எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத 5 படங்கள்