புதன்கிழமை, நவம்பர் 20, 2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைமாறிய 75 லட்சம்.. விசாரணை வட்டத்திற்குள் வந்த நெல்சன் மனைவி

Nelson: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுக்க கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் இதுவரை 25 பேரை கைது செய்துள்ளனர்.

அதில் திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை அடுத்து மீதமுள்ள நபர்கள் சிறையில் இருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சனின் மனைவிக்கும் இதில் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டது எதிர்பாராத திருப்பமாக உள்ளது.

அதாவது ஆற்காடு சுரேஷ் சாவுக்கு பழி வாங்கும் விதமாக தான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடத்தப்பட்டிருக்கிறது. போலீஸ் விசாரணையில் வெளிவந்த இந்த தகவலை அடுத்து முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடியும் சில தினங்களுக்கு முன் கைதானார்.

விசாரணை வளையத்தில் சிக்கிய நெல்சன் மனைவி

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி மொட்டை கிருஷ்ணன், சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் தலைமறைவான நிலையில் நெல்சன் மனைவி மோனிஷாவுக்கு இதில் பங்கு இருப்பதாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் மொட்டை கிருஷ்ணன் மோனிஷாவுக்கு பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர் என தெரியவந்துள்ளது. அது மட்டும் இன்றி அவர் வழக்கறிஞர் என்பதால் வழக்கு தொடர்பாக இவர்கள் அடிக்கடி பேசி இருக்கின்றனர்.

ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பற்றி எதுவும் தெரியாது என மோனிஷா தெரிவித்து இருக்கிறார்.. இந்நிலையில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 75 லட்சம் மொட்டை கிருஷ்ணன் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இது எதற்காக? இந்த கொலையில் அவருக்கு ஏதும் பங்கு இருக்கிறதா? இந்த பணத்தை வைத்து தான் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. மேலும் மோனிஷா மொட்டைகிருஷ்ணன் இருவரும் நட்சத்திர விடுதியில் சந்தித்து பேசியதும் தெரிய வந்துள்ளது. இதனால் நெல்சன் விசாரிக்க பட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

- Advertisement -spot_img

Trending News