லீலைகளின் மன்னன் சித்திக் தமிழில் கலக்கிய 5 படங்கள்.. அர்ஜுனுக்கு செய்த துரோகம்

Malayala Actor Siddique 5 Tamil Movies: தமிழ் படங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகமாக விரும்பி பார்ப்பது மலையாள படங்கள்தான். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த படங்களுக்கு அதிக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மலையாள நடிகர் சித்திக் சர்ச்சையில் மாட்டிய விவாகரமும் வெளிவந்திருக்கிறது.

அதாவது சக நடிகைகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டதால் மலையாள நடிகர் சித்திக் மீது குற்றச்சாட்டுகள் எழும்பி இருக்கிறது. இப்படிப்பட்டவர் தமிழிலும் ஐந்து படங்கள் நடித்திருக்கிறார். அதை பற்றி தற்போது பார்க்கலாம்.

சுபாஷ்: இயக்குனர் உதயகுமார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு அர்ஜுன், ரேவதி நடிப்பில் சுபாஷ் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அர்ஜுன் நேர்மையான ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். இதில் இவரோட அண்ணனாக ராஜசேகர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சித்திக் நடித்திருக்கிறார். இவருடைய கேரக்டர் பயங்கரவாத தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு ஊழல் அரசியல்வாதியை நடத்தும் விதமாக அர்ஜுனுக்கு துரோகம் செய்திருப்பார். ஆனால் இவரைப் பற்றி தெரிந்ததும் அர்ஜுன், அண்ணனை தண்டிக்கும் விதமாகவும் இவரிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றும் விதமாக போராடுவார்.

குட்டி பாயாக சிம்புவை நெருக்கடி செய்த சித்திக்

ஜனா: இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு அஜித், சினேகா நடிப்பில் ஜனா திரைப்படம் வெளிவந்தது. இதில் பாண்டாரி கதாபாத்திரத்தில் சித்திக் நடித்திருக்கிறார். இவர் மற்றும் இவருடைய அண்ணன் ரியாஸ்காணும் வெடி மருந்துகளையும் ஆயுதங்களையும் தயாரிக்கும் விதமாக பல தவறுகளை செய்து வருவார். பின்பு இதனை கண்டுபிடித்து சண்டை ஏற்படுவதில் ரியாஸ்கான் இறந்து விடுவார். அப்பொழுது இறந்ததற்கு காரணம் ஜனா தான் என்று அவரை பழிவாங்கும் விதமாக சித்திக் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார்.

ரங்கூன்: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு ரங்கூன் படம் வெளிவந்தது. இப்படத்தில் குணசீலன் என்ற கேரக்டரில் கௌதம் கார்த்திக்கின் முதலாளியாக சட்டவிரோதமான செயல்களை செய்து அதிகாரம் பண்ணும் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்: இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் வெளிவந்தது. இதில் அமலாபாலுவின் மாமனாராக மலையாள நடிகர் சித்திக் வில்லனாக நடித்திருக்கிறார்.

வெந்து தணிந்தது காடு: கௌதம் மேனன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு சிம்பு, சித்தி இத்னானி நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படம் வெளிவந்தது. இதில் சித்திக், குட்டிப்பாய் என்கிற குட்டி கிருஷ்ணன் நாயகராக வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். இதன் மூலம் முத்துவீரனாக நடித்த சிம்புவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக குட்டி பாய் மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டி இருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News