ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கமல் மீது வஞ்சகத்துடன் திரியும் மாரி செல்வராஜ்.. படத்துக்கு படம் வறுத்தெடுக்க இதுதான் காரணம்?

Mari selvaraj and kamal: பொதுவாக இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் வெற்றி அடைய வேண்டும், அதன் மூலம் பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்று தான் இயக்குவார்கள். ஆனால் மாரி செல்வராஜ் எடுக்கக்கூடிய படங்களில் உள்ள கதைகள் மக்களிடம் என்றைக்கும் நீங்காத ஒரு இடத்தை பிடிக்க வேண்டும். அதனுடன் ஒன்றோடு ஒன்று இணைக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து உண்மை சம்பவங்களை அடிப்படையாக எடுக்கக் கூடியவர்.

அப்படி அவர் எடுத்த படங்கள் ஆனா பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் சமீபத்தில் வெளிவந்த வாழை போன்ற படங்கள் அனைத்துமே மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த வகையில் மாரி செல்வராஜ் எடுக்கும் படங்களின் கதைகள் பேசும்படியாக நிலைத்து நிற்கும் என்பது உறுதியாகிவிட்டது.

தீராத பாகையாக போய்க் கொண்டிருக்கும் கோபம்

இந்த சூழ்நிலையில் வாழைப் படத்தின் கதைகளை குறித்து பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் அவர்களுடைய பாராட்டுகளை தொடர்ந்து கொடுத்த வண்ணமாக இருக்கிறார்கள். ஆனால் இன்னும் கமல் மட்டும் இந்த படத்தின் கதையை பற்றி வாய் திறக்காததற்கு பின்னணி காரணம் இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் சினிமாவிற்குள் உதவி இயக்குனராக மாரி செல்வராஜ் நுழைந்ததிலிருந்து கமல் மீது வஞ்சகத்துடன் தான் சுற்றித் திரிகிறார். அதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பார்க்கலாம். அதாவது இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக மாரி செல்வராஜ் சேர்ந்த பொழுது கமல் நடித்த தேவர்மகன் படத்தை கடுமையாக விமர்சித்து ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அதில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து எழுதும் ஒரு பையனின் பகிங்கரகமான கடிதம் என துவங்கி மிஸ்டர் களவாணி காமன் மேன் என கமலஹாசனை வறுத்தெடுக்கும் விதமாக மாரி செல்வராஜ் எழுதியிருந்தார். அதோடு விடாமல் இயக்குனராக முதன்முதலில் எடுத்த பரியேறும் பெருமாள் ரிலீஸ் சமயத்தில் கூட கமல்ஹாசனின் பாபநாசம் படத்தை விமர்சித்து ஒரு மேடையில் பேசியிருந்தார்.

அதாவது பாபநாசம் படத்தில் தன் மகள் செய்த கொலையை மறைக்கும் விதமாக எடுக்கப்பட்டதை தவிர உன்னிடம் தவறாக நடந்தது அவன் தான். அதனால் அவன் தான் பயப்படனும் நீ பயப்படத் தேவையில்லை என்று ஒரு இடத்தில் கூட சொல்லி இருக்க மாட்டார். அதற்கான காரணம் என்று கேள்வி கேட்ட கேட்ட நிலையில் இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இதுவரை கமலை மறைமுகமாக தாக்கி வந்திருந்த மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமலை சிறப்பு விருந்தினராக கூப்பிட்டு அனைவரது முன்னாடியிலும் தேவர் மகன் படம் முழுக்க முழுக்க சாதி வெறியை தூண்டிய படமாக இருந்தது என்று கூறியிருந்தார். அதேபோல வாழைப் படத்திலும் தில்லாக சொல்லும் விதமாக இரு சிறுவன்களை காட்டி ஒருவன் ரஜினியின் ரசிகராகவும் இன்னொருவன் கமலின் ரசிகராகவும் காட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் ரஜினியின் ரசிகராக இருக்கும் சிறுவனை உயர்வாக காட்டி கமல் ரசிகராக இருக்கும் சிறுவனை காமெடி பீஸ் போலவே கொண்டு அவரை மட்டம் தட்டும் அளவிற்கு வசனங்களை வைத்திருக்கிறார். பொதுவாக மாரி செல்வராஜ் உண்மை சம்பவங்கள் தான் எடுத்து வருகிறார் என்று அனைவரும் அறிந்த விஷயமே. அப்படி என்றால் மாரி செல்வராஜ் சிறுவயதில் இருக்கும் பொழுது கமலால் மிகப்பெரிய பாதிப்படைந்தது போல் தெரிகிறது.

அதனால் தான் அவர் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் கமலை வஞ்சகம் தீர்க்கும் அளவிற்கு கோபத்தை காட்டுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது என பலரும் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதனால் தான் கமல் வாழைப் படத்தை பாராட்ட முன்வரவில்லை என்ற பேச்சுக்களும் போய்க் கொண்டிருக்கிறது.

அதை மாதிரி மாரி செல்வராஜ் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களை அழைத்து வாழைப் படத்தை பார்க்க வைத்தார். ஆனால் கமலஹாசனிடம் மட்டும் அந்த படத்தை காட்டவும் இல்லை கேட்கவும் இல்லை. அந்த அளவிற்கு கமல் மீது கோபத்தில் இருக்கிறார்.

Trending News