23 வருட வரலாற்று வெற்றியை ருசித்த பங்களாதேஷ்.. பாகிஸ்தானை மரணமாய் அடித்து துவைத்த வங்க புலிகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டியை பங்களாதேஷ் வெற்றி பெற்ற நிலையில் தற்போது நடந்து வரும் இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தானை வென்று அசத்தியுள்ளது.

இதன் மூலம் 23 வருடத்திற்கு அப்புறம் வெளிநாட்டு மண்ணில் பங்களாதேஷ் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. அதுவும் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஸ் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதலாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 274 ஆண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் ஆடிய பங்களாதேஷ் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு 262 ரன்கள் குவித்தது. 14 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் பங்களாதேஷ் அணிக்கு 185 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்த இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானை மரண அடி அடித்த வங்க புலிகள்

இதற்கு முன்னர் பங்களாதேஷ் அணி 2001 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக ஒரு தொடரையும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு தொடரையும் வென்றுள்ளது. இப்பொழுது பாகிஸ்தானுக்கு எதிராக 23 ஆண்டுகள் கழித்து வெளிநாட்டில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி மண்ணை கவ்வியது அந்த நாட்டில் பூதாகர பிரச்சனைகளை கிளப்பி வருகிறது. புது கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷான் மசூத் தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி இரண்டு தொடர்களில் வெயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளிடம் தோல்வியடைந்துள்ளது.

Trending News

- Advertisement -spot_img