சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மட்ட பாடலுக்கு திரிஷா வாங்கிய சம்பளம்.? சமந்தா விட கம்மி தான் பாஸ்

Trisha : விஜய் மற்றும் திரிஷாவின் கெமிஸ்ட்ரியை பற்றி சொல்லவா வேண்டும். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இந்த ஜோடி கடைசியாக லியோ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். திரிஷாவுக்கு நடுவில் தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்தது.

ஆனாலும் பொன்னியின் செல்வன் மூலம் கம்பேக் கொடுத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா தான் கதாநாயகி என்ற பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கும் சூழலில் பொதுவாக படங்களில் கேமியா தோற்றத்தில் நடிக்க கதாநாயகிகள் தயங்குவார்கள். அதுவும் ஒரு பாடலுக்கு நடனம் என்றால் கண்டிப்பாக சம்மதிப்பது கடினம். ஆனால் சமந்தா புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடி ட்ரெண்டானார்.

கோட் படத்தில் திரிஷா வாங்கிய சம்பளம்

அதேபோல் தான் ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவலா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இப்போது கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா மட்ட பாடலில் நடனமாடி இருக்கிறார். இப்போது எங்கு பார்த்தாலும் இந்த பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதோடு இந்த பாடலில் மஞ்சள் நிற உடையில் வந்திருந்த த்ரிஷா சிகப்பு நிற கர்சிப்பையும் அணிந்திருந்தார். இது விஜய்யின் கட்சிக்கொடியின் நிறம் என்றும் சர்ச்சையாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த பாடலுக்கு த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது சமந்தா ஓ சொல்றியா பாடலுக்கு 3 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். அந்தப் பாடல் முழுக்க சமந்தா அடி இருந்தார். ஆனால் மட்ட பாடலில் சில நிமிடங்கள் மட்டுமே நடனம் ஆடின த்ரிஷாவுக்கு 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மார்க்கெட்டை பிடித்த திரிஷா

Trending News