செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

பாண்டியாவை நம்பி மொத்தமும் போச்சு.. ரோகித்தின் செல்ல பிள்ளையாக வலம் வரும் வீரர்

20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற கேப்டன்களுள் ஒருவர் ரோகித் சர்மா என்ற பெருமையோடு 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரை தொடர்ந்து சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர்.

இந்த நிலையில் தான் இப்பொழுது ரோகித் சர்மா விளையாடி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. அந்த அணியின் ஓனர்களாகிய அம்பானி குழுவினர் எதிர்பாராத விதமாக பல திருப்பங்கள் நடைபெற்றுள்ளது.

ரோகித் சர்மாவிற்கு பின் மும்பை இந்தியன்ஸ் எதிர்காலம் என ஹார்திக் பாண்டியாவை வளர்த்து விட ஆசைப்பட்டார்கள். அதன் காரணமாகவே சென்ற முறை விளையாடிய தொடரில் அவரை மும்பை அணியின் கேப்டனாக நியமித்தனர் ஆனால் அது பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

ரோகித்தின் செல்ல பிள்ளையாக வலம் வரும் வீரர்

எல்லா பக்கத்தில் இருந்தும் ஹர்திக் பாண்டியா, கேப்டன் சுமையை தாங்க மாட்டார். அவரால் தான் மும்பை அணி தொடரில் கோட்டை விட்டது என்று எதிர்ப்புகள் கிளம்பியது. இது ஒரு புறம் இருக்க இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவின் செல்லப்பிள்ளை சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.

அதனால் இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்த ஆண்டு அவர் விளையாடுவார் என இது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறி வருகிறார் . மேலும் அவர் 20 ஓவர் போட்டிகளில் மீண்டும் விளையாடுவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அதுமட்டுமின்றி அவரையே கேப்டனாகவும் நியமிப்பார்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News