பெத்த லாபத்தை கொடுத்த 5 படங்களும் கல்லாவை கரைத்த கமலும்.. நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்ட சென்செக்ஸ் அறிக்கை..

நெட்ஃபிலிக்ஸ் தனது நிறுவனத்திற்கு லாபம் தந்த 5 படங்களை வரிசைப்படுத்தி சென்செக்ஸ் எடுத்துள்ளது. அவற்றுள் அவர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்தது விஜய் சேதுபதி. அதேபோல் நஷ்டம் விளைவித்தது கமல் படம் தானாம். குறிப்பாக ஓடிடி நிறுவனங்கள் எல்லாம் இப்பொழுது படங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதில்லை.

லவ் டுடே: 2022டில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய படம் லவ் டுடே. சுமார் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 70 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் ரிலீஸ் செய்தது. இந்த படத்தை 35 கோடிகள் கொடுத்து வாங்கி லாபம் அடைந்தது.

கட்டா குஸ்தி: விஷ்ணு விஷால் நடிப்பில் காமெடியாக உருவான இந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்தை சுமார் 24 கோடிகளுக்கு நெட்ஃபிலிக்ஸ் வாங்கியது. இந்த படம் தியேட்டர்களில் 50 கோடிகள் வசூலித்தது. அதைப்போல் ஓடிடி தளத்திலும் நல்ல லாபம் வந்தது

டான்: சிபி சக்கரவர்த்தி இயக்கிய இந்த படத்தை நெட்லிக்ஸ் 45 கோடிகள் கொடுத்து வாங்கியது. இந்த படமும் அவர்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தது. தியேட்டரில் மட்டும் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

மாமன்னன்: ரீ என்ட்ரி கொடுத்து நடிக்க வந்த வடிவேலு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தார், அவருக்காகவே இந்த படம் நன்றாக ஓடியது. இந்த படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் 33 கோடிகள் கொடுத்து வாங்கி லாபம் அடைந்தது.

மகாராஜா: இந்த ஆண்டு வெளிவந்த விஜய் சேதுபதியின் மகாராஜா படம் தான், இதுவரை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடிக்கு பெத்த லாபத்தை பெற்றுக் கொடுத்து வருகிறது. 40 கோடி கொடுத்து வாங்கிய இந்த படம் இதுவரை 50 கோடிகள் வரை வசூலித்துள்ளது. கமல் மற்றும் சங்கரை நம்பி வாங்கிய இந்தியன் 2 படம் மண்ணை கவ்வியது.

- Advertisement -spot_img

Trending News