ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கயில் திருமணத்தால் டிஆர்பி ரேட்டிங்கில் பிச்சு உதறும் சன் டிவி.. முதல் ஐந்து இடத்தை பிடித்த 5 சீரியல்கள், ஊசலாடும் விஜய் டிவி

Top 5 Serials in TRP Rating: சின்னத்திரை பொருத்தவரை சீரியலுக்கு எப்பொழுதுமே மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் எக்கச்சக்கமான சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறார்கள். அதில் எந்த சீரியல் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் படி கணித்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல் அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

விஜய் டிவி என்னதான் சன் டிவிக்கு போட்டியாக பல சீரியல்களை கொண்டு வந்தாலும் சீரியல் என்றால் சன் டிவி தான். இந்த இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று விஜய் டிவி போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் சிறகடிக்கும் ஆசை சீரியல்தான் முதல் ஐந்து இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை அவ்வப்போது தக்க வைத்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.77 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

டாப் கியரை போட்டு முதல் இடத்தில் இருக்கும் கயல்

இதனை தொடர்ந்து நான்காவது இடத்தை பிடித்தது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் தான். ஆதிரை பிரபு திருமணத்தின் டிராக்கை வைத்து பல வாரங்களாக இழுத்து அடித்துக் கொண்டு வரும் நிலையில் ஆதிரையின் துணிச்சலான பதிலடி பலரையும் கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.32 புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக புத்தம் புது சீரியலாக வந்த மூன்று முடிச்சு சீரியல் மக்களின் ஃபேவரிட் நாடகமாக இடம் பிடித்து விட்டது. சூர்யா மற்றும் நந்தினியின், காதல் ரொமான்ஸ் கல்யாணம் எப்பொழுது வரும் என்று ஆவலுடன் இந்த சீரியலை மக்கள் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஜோடி மக்களை கவர்ந்த பேவரிட் ஜோடியாக இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த வாரம் 8.40 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இதனை தொடர்ந்து அழகன் யார் என்று கண்டுபிடிக்கும் விஷயத்தில் ஆனந்தி, அன்புவை டார்ச்சர் செய்து வருகிறார். ஆனால் அன்பு, ஆனந்திக்கு ஒரு பிரச்சினை என்றதும் தன்னால் உதவ முடியவில்லை. ஆனால் மகேஷ் கண்ணிமைக்கும் நொடியில் உதவியதால் ஆனந்திக்கு பொருத்தமான ஜோடி மகேஷ் தான் என்று அன்பு முடிவெடுத்து ஆனந்தியை விட்டு விலகி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் சிங்க பெண்ணே சீரியல் 8.56 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

பல மாதங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கயல் மற்றும் எழிலின் திருமணம் தற்போது கைகூடி இருக்கிறது. ஆனாலும் இதை தடுக்க வேண்டும் என்பதற்காக தீபிகா சிவசங்கரி போட்ட சதி கயலுக்கு தெரியவந்த நிலையில், கயல் வழக்கம் போல் சிவசங்கரிக்கு செக் வைக்கும் விதமாக தீபிகாவை மண்டபத்தை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

அந்த வகையில் கயல் எழில் கல்யாணத்தை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது என்பதற்கு ஏற்ப கல்யாணம் ஜோராக நடக்கப்போகிறது. இந்த கல்யாணத்தை தடுக்க முடியாமல் சிவசங்கரி வேடிக்கை மட்டும் பார்க்கப் போகிறார். இப்படி விறுவிறுப்பான காட்சிகளுடன் வந்து கொண்டிருக்கும் கயல் சீரியல் இந்த வாரம் அதிகப்படியான 9.07 புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

Trending News