திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

ரஜினி-லதா விவாகரத்து, சினிமாவுக்கு எண்டு கார்டு.. துறவியா போன சூப்பர் ஸ்டார் மீண்டு வந்த கதை, ரீவைண்ட்

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதா உடன் 40 ஆண்டுகளுக்கும் மேலான திருமண வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார். சூப்பர் ஸ்டாரின் இந்த வெற்றிக்கும், ஆரோக்கியத்திற்கும் லதா ரஜினிகாந்த் தான் முக்கியமான காரணம் என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த ஆதார்ச தம்பதிகளுக்கு நடுவே ஒரு பெரிய பிரச்சனை உருவாகி விவாகரத்து வரை சென்றது ஒரு சிலருக்கு நினைவிருக்காது. அது மட்டும் இல்லை இனி சினிமாவும் வேண்டாம், குடும்பமும் வேண்டாம் என துறவு வாழ்க்கைக்கு ரஜினி சென்ற கதையும் நடந்திருக்கிறது.

ரஜினி-லதா விவாகரத்து, சினிமாவுக்கு எண்டு கார்டு

இதெல்லாம் ரஜினிக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்களில் அதாவது 1985 ஆம் ஆண்டில் நடந்த விஷயம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதாவை விவாகரத்து செய்யப் போகிறார் என ஒரு பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

அதை தொடர்ந்து பல பத்திரிகைகளும் இந்த விவாகரத்து கதையை வாராவாரம் போடும் அளவுக்கு பிரச்சனை நீண்டு போனது. ரஜினிகாந்த் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்னும் இயக்கத்தில் இணைந்து விட்டார்.

அந்த இயக்கத்திற்காக தன்னுடைய போயஸ் கார்டன் வீடு கொடுக்கப் போகிறார். தான் குடும்பத்தோடு வசிக்க வேளச்சேரி பகுதியில் சிம்பிளாக ஒரு வீடு கட்டி இருக்கிறார். இதற்கு லதா ஒத்துக் கொள்ளவில்லை, அதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது என ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

ரஜினிகாந்த் ராகவேந்திரா என்னும் படத்தில் நடிக்கிறார், அந்த படத்திற்காக தன்னை ஒரு துறவியாகவே மாற்றிவிட்டார்.. அதனால் மனைவியையும் ஒதுக்கி வைக்கிறார் என ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. அது மட்டுமில்லாமல் அப்போதைய பாலிவுட் நடிகை ஒருவருடன் ரஜினி தொடர்ந்து நடிக்க ஆசைப்படுவதாகவும் அதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாகவும் கூட செய்திகள் வெளியானது.

அந்த சமயம் ரஜினி ரொம்பவும் மனக்குழப்பத்துடனே இருந்திருக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் அவருடைய குருவான இயக்குனர் பாலச்சந்தரிடம் சொல்லி இருக்கிறார். பாலச்சந்தர் வந்து பேசியும் ரஜினிகாந்த் முடிவில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்திருக்கிறது.

அப்போது பாலச்சந்தர் உன் விருப்பம் என்னவோ பண்ண இந்த அட்வான்ஸ் தொகையை வச்சுக்கோ, நடிகனும்னு தோணுச்சுன்னா என வந்து பாரு என்று சொல்லிவிட்டாராம். ரஜினியும் இமயமலைக்கு கிளம்பி போயிருக்கிறார்.

அங்கு போய் கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு தன்னுடைய குழந்தை ஞாபகம் வந்துவிட்டதா. அப்போது அங்கே இருந்த துறவிகள் நீ துறவி கிடையாது, நீ சாதிக்க நிறைய விஷயம் இருக்கிறது உன் வீட்டிற்கு போ என்று அறிவுறுத்தி அனுப்பி இருக்கிறார்கள்.

வீடு திரும்பிய பிறகும் ரஜினி சினிமாவில் நடிப்பதா இல்லை. ரஜினி சினிமாவை விட்டு விலகுகிறார் என்ற செய்தி அறிந்ததும் ரசிகர்கள் தொடர்ந்து அவர் வீட்டுக்கு வருகை தந்திருக்கிறார்கள். ரசிகர் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வீட்டு முன்பு வந்து நின்று தலைவா நீ பட நடிக்கலனா கொளுத்தி விட்டு செத்துடுவேன்னு சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் பார்த்த பிறகு தான் ரஜினி மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

Trending News