ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சூப்பர் ஸ்டாருக்கு அதிநவீன சர்ஜரி.. அப்பல்லோ டாக்டர்கள் எடுத்த முடிவு

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி எல்லோருக்குமே பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. 70 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக அடுத்தடுத்து தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி ஆக்கி வருகிறார் ரஜினி.

இன்னும் சில தினங்களில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த வேட்டையன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த சமயத்தில் நேற்று கூலி படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய ரஜினிக்கு அதிக வயிற்று வலியும் உடல் சோர்வும் ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் அப்பல்லோ மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துவிட்டு ரஜினியை அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ரஜினி செல்வதற்கு முன்பே மருத்துவ குழு அவருக்கு சிகிச்சை செய்ய தயாராக இருந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டாருக்கு அதிநவீன சர்ஜரி

நேற்று இரவே ரஜினிக்கு கேத் லேபில் சிகிச்சை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது வெளியாகியிருக்கும் செய்தியின் படி ரஜினிகாந்த்திற்கு ரத்த நாளம் ஒன்று விரிவாக இருப்பதாகவும் அதை சரி செய்யும் சிகிச்சை நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

பிரபல இதயவியல் நிபுணர் சாய் சதீஷ் ரஜினிகாந்த்திற்கு சிகிச்சை அளித்து வருகிறார். ரஜினிக்கு செய்யப்பட்ட சிகிச்சை ரொம்பவும் அதிநவீன சிகிச்சை எனவும், 70 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சை தான் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது.

இது மிகப்பெரிய அறுவை சிகிச்சை இல்லை என்றும், இன்னும் சில மணி நேரங்களில் ரஜினி ரூமுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. மற்ற பரிசோதனைகள் எல்லாம் முடிந்த பிறகு நடிகர் ரஜினி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

Trending News