திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

மணிமேகலைக்கு ஏற்பட்ட அவமானம், அதிரடியாக முடிவை எடுத்த கலாநிதி.. ஆரம்பமாகும் டாப்பு குக் டுப்பு குக்கு சீசன் 2

Sun TV Kalanithi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி 5 சீசனில் மணிமேகலை மற்றும் பிரியங்காவிற்கு ஏற்பட்ட பஞ்சாயத்தினால் ரசிகர்கள் இதன் மேல் வைத்திருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையும் பாழாகிபோனது. ஏனென்றால் அந்த அளவிற்கு விஜய் டிவி மற்றும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் கண்மூடித்தனமாக பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்து மணிமேகலையை கண்டுக்காமல் விட்டதால் சேர்த்து வைத்த மொத்த பேரையும் கெடுத்து கொண்டது.

இதே மாதிரி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த டாப்பு குக் டுப்பு குக்கு 1 சீசன் நிகழ்ச்சியை வெங்கட் பட் தொகுத்து வழங்கி வந்தார். ஆரம்பத்தில் வெங்கட் பட்டுக்கு எதிராக சில நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் போகப்போக இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கும் அளவிற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

மணிமேகலைக்கு அடித்த ஜாக்பாட்

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி ஃபைனலிஸ்ட் அறிவிக்கும் விதமாக நரேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா முதல் தேர்வு செய்திருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் பெப்சி விஜயன் மற்றும் மூன்றாவது இடத்தில் கயல் சைத்தார தேர்வு செய்யப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் விதமாக முதல் பரிசுக்கு 20 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

அத்துடன் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக கொடுத்ததற்கு மக்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி என்று வெங்கட் பட் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு போட்டிருந்தார். அந்த வகையில் தற்போது இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அக்டோபர் இரண்டாம் தேதி மெட்ராஸில் இருக்கும் சிட்டி சென்டர் சாலையில் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒரு நிகழ்ச்சியை நடத்தப் போவதாக கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து கூடிய விரைவில் சீசன் 2 நிகழ்ச்சியும் ஆரம்பமாக போகிறது. அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உண்மையான போட்டி, காமெடி கலாட்டா என அனைத்தும் இருக்கும். யார் மனசையும் கஷ்டப்படுத்தாமல் நடத்துவதற்கு மீடியா மேசன் தயாராக இருக்கிறது. கூடிய விரைவில் சீசன் 2 நிகழ்ச்சியில் சந்திக்க வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே விஜய் டிவி குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் சன் டிவிக்கு போய் விட்டார்கள். இந்த சூழ்நிலையில் விஜய் டிவியில் மணிமேகலைக்கு ஏற்பட்ட அவமானத்தினால் சன் டிவியில் இருக்கும் டாப்பு குக் டுப்பு குக்கு சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு மணிமேகலைக்கு ஒரு வாய்ப்பு வரப்போகிறது.

அந்த வகையில் கிடைக்கிற சான்சை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மீடியா மேசன் மற்றும் சன் டிவி கலாநிதி மாறன் சேர்ந்து மணிமேகலைக்கு தொகுப்பாளனியாக சான்ஸ் கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போது இந்த ஒரு விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் மணிமேகலையின் ஆதரவாளர்கள் பலரும் மணிமேகலைக்கு கிடைத்த நல்ல சான்ஸ். நிச்சயமாக சன் டிவிக்கு போய்விட்டால் வெங்கட் பட் காம்போவுடன் நடக்கப் போகும் சீசன் 2 வெற்றி நிச்சயம் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Trending News