Sun Tv Serial: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று மக்கள் மனதில் ஒரு தரமான இடத்தை பிடித்து விட்டது. அதுவும் சும்மா இல்ல கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் ஒய்யாரமாக முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. அதற்கு காரணம் குடும்பங்கள் கொண்டாடும் அளவிற்கு இல்லத்தரசிகளின் மனதை கவரும் வகையில் தினமும் அவர்களுடைய பொழுதுபோக்காக தரமான சீரியல்களை கொடுத்து வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் ஜொலித்து வருகிறது.
அந்த வகையில் இப்பொழுதும் சன் டிவி பக்கத்தில் மற்ற எந்த சேனலும் நெருங்க முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப சீரியலில் கெத்து காட்டி வருகிறது. இதில் எத்தனையோ சீரியல்கள் மக்களின் பேவரைட் சீரியலாகவும் இரண்டாம் பாகமாக கொண்டு வந்தாலும் தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற அனைத்து சீரியலுக்கும் மக்கள் தொடர்ந்து பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.
விறுவிறுப்பான கதையுடன் ட்ரெண்டிங் ஆகும் சீரியல்
சமீபத்தில் அவசர அவசரமாக முடிவுக்கு வந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு அடுத்து எப்பொழுது இந்த மாதிரி ஒரு கதை வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அட்லீஸ்ட் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகத்தையாவது கொண்டுட்டு வாங்க என்று மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கும் விதமாக சில புது சீரியல்கள் டாப் கியரை போட்டு சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது.
அதிலும் தற்போது இந்த வாரத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சீரியல் எதுவென்றால் மல்லி தான். மல்லியை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வரவேண்டும் என்பதற்காக விஜய் பல முயற்சிகளை எடுத்தார். ஆனால் கதிரேசன் போட்ட பிளானில் சிக்கிய விஜய் வெண்பாவை அடகு வைக்கும் விதமாக கையெழுத்துப் போட்டுவிட்டு மல்லியை காப்பாற்றி விட்டார்.
இந்த சான்ஸை பயன்படுத்தி கதிரேசன் மகளை கூட்டிட்டு வந்து விஜய் வீட்டில் மிகப் பெரிய பிரச்சனை பண்ணி விட்டார். அந்த வகையில் விஜய் போட்ட கையெழுத்தின் படி இனி என்னுடைய பேத்தி வெண்பா எங்களுடன் தான் இருப்பாள் என்று வலுக்கட்டாயமாக கூட்டிட்டு போகிறார். இதையெல்லாம் தடுக்க முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் விஜய் மாட்டிக்கொண்டார்.
ஆனால் என்ன ஆனாலும் நான் என் மகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கடைசி வரை மல்லி போராடி ஜெயித்து காட்டி விட்டார். அந்த வகையில் கதிரேஷனையே பயமுறுத்தும் வகையில் துணிந்து ஆக்ரோஷமாக மல்லி செயல்பட்டதால் வெண்பாவை கூட்டிட்டு போக முடியாத சூழ்நிலை கதிரேசனுக்கு ஏற்பட்டு விட்டது. அதிலும் போலீஸ் வந்தாவது இந்த மல்லி கொஞ்சமாவது அடங்குவார் என்று எதிர்பார்த்த கதிரேசனுக்கு ஒட்டுமொத்தமாக பதிலடி கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.
தற்போது வெண்பா, விஜய் மீது கோபமாக இருக்கிறார். இதை சரிகட்டும் விதமாக மல்லி, வெண்பாவிற்கு சில விஷயங்களை எடுத்துச் சொல்லி விஜய் இடம் சமரசம் செய்து விட்டார். இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் அடித்து தூள் கிளப்பும் மல்லியின் ஆட்டம் பார்ப்பதற்கு பேர் ஆனந்தமாக இருக்கிறது. அதனாலேயே குடும்பங்கள் கொண்டாடும் அளவிற்கு மல்லி சீரியல் ட்ரெண்டிங் ஆகி கொண்டு வருகிறது.
- Sun Tv Serial: 1000 எபிசோடு தாண்டி முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்
- சன் டிவியில் தூள் கலப்பும் 5 சீரியல்கள்
- முக்கியமான 5 சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி