திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

அடுத்த தளபதி ஆகும் தகுதி சிவகார்த்திகேயனுக்கு இருக்கா? பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!

அடுத்த விஜய் யார்? அவரது இடத்தை யார் பிடிப்பது என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், அடுத்த தளபதி ஆகும் தகுதி சிவகார்த்திகேயனுக்கு இருக்கிறது என்று பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். விஜய் அரசியலில் கால்பதித்துள்ள நிலையில், விஜய்யின் வெற்றிடத்தை யார் பிடிக்கப்போவது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்குப் பதில் தரும் விதமான தி கோட் படத்தில் ‘எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு நீங்க பார்த்துக்கோங்க’ என்று சிவாவிடம் விஜய் கூற, அதற்கு சிவாவும், ‘நீங்க போங்க சார் நான் பார்த்துக்கிறேன்’ என்பது போல் காட்சிகளும் வசனங்களும் இருந்தன.

இதை எல்லா நடிகர்களும் விஜய் ரசிகர்களும் ஏற்றுக் கொண்டார்களா எனத் தெரியவில்லை. குறிப்பாக, விஜய் சினிமாவில் தன் 30 ஆண்டு பயணத்தில் இதுவரை நடித்துள்ள 68 படங்களின் மூலம் பல படங்களில் முதல் நாள் வசூல், அதிக வசூல் சாதனை, ஓவர் சீஸ் வசூல், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் படம் ரிலீஸ் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்துள்ளார்.

விஜய்யின் இடத்தை பிடித்தாரா சிவகார்த்திகேயன்?

எனவே விஜய்யின் இடத்தை அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது என்ற போதிலும், தற்போது சிவா நடிப்பில் உருவாகியுள்ள அமரன் பட புரமோசனின் கலந்து கொண்டு பேசிய அவரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், ‘சினிமாவில் ஒரே தளபதி, ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே உலக நாயகன் தான் அவர்கள் இடத்தை யாரும் பிடிக்க முடியாது’. நான் அப்படியில்லை’’ என்று வெளிப்படையான பதில் அளித்திருந்தார்.

இருப்பினும் இந்த விவாதம் பல மீடியாக்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், தமிழ் சினிமாவில் அடுத்த விஜய் சிவகார்த்திகேயனா என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்கப்பட்டது.

தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது:

”அடுத்த தளபதியாக வருவதற்கு சிவாவுக்கு நிறைய தகுதிகள் உண்டு. நல்ல என்டர்டெயினர், நல்ல ஃபெர்பாமரா அமரன் படத்தில் வருகிறார். அவருக்கான பிசினஸ் கேரன்டியாக உள்ளது. சேட்டிலைட் ரைட்ஸ் மற்றும் டிஜிட்டர் ரைஸ்ட் அவரது படங்கள் அறிவித்தாலே உடனே வாங்க பிளாட்ஃபார்ம்கள் உள்ளன.ஆடியோ ரைஸ்ட்சும் வாங்க, நான் தியேட்டரிடிக்களில் அவர் படத்தையும் வாங்க பலர் உள்ளனர். எனவே அவருக்கு எல்லா தகுதிகளும் உண்டு.

ஆனால் அவருக்கு முன்பே அந்த இடத்தில் பலர் உள்ளனர். அந்த பெரிய நடிகர்கள் பட்டாளமே நிறைய சாதனைகள் படைத்துள்ளனர். அதனால், எல்லோருக்கும் விஜயின் இடத்தைப் பிடிக்க ஆசைப்படுவர். அந்த இடத்தை சிவா பிடிக்க இன்னும் 4 வருடங்கள் ஆகும். ஏனென்றால் தற்போது விஜய்69 படம் நடக்கிறது. வரும் 2025 வரை இதைப் பேசக்கூடாது. அதன்பிறகுதான் வெற்றிடம் நிலவும்போது பேசலாம்” என்று கூறியுள்ளார்.

Trending News