சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பரபரப்பாக ரெடியாகும் SK -வின் புறநானூறு, எஸ் ஆன லோகி.. வாய்ப்பை தட்டி தூக்கிய நயனின் தம்பி

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து தரமான படங்கள் வரிசை கட்டிக் கொண்டு காத்திருக்கின்றன. தற்போதைய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் படம் ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது.

அதேபோன்று இயக்குனர் சுதா கொங்கரா உடன் சிவகார்த்திகேயன் இணைந்து புறநானூறு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதை முதலில் சூர்யாவுக்காக எழுதப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வெளியானது.

அதன் பின்னர் சில எதிர்பாராத சூழ்நிலையால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அடுத்த இந்த கதை யார் கைக்கு போகும் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. நடிகர் தனுஷ் கூட இந்த படத்தில் நடிக்க ஆசைப்பட்டதாக தகவல் வெளியானது.

வாய்ப்பை தட்டி தூக்கிய நயனின் தம்பி

இதற்கு காரணம் சமீப காலமாக இந்தி எதிர்ப்பு பெரிய அளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருப்பதால் கண்டிப்பாக இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பதால் தான். சூர்யா விலகியதும் இயக்குனர் சுதா கொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயனை தான் தன்னுடைய இந்த கதைக்காக தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். புறநானூறு படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார். அவருடைய கேரக்டரில் இப்போதைக்கு நடிப்பதற்கு நடிகர் அதர்வாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. அதர்வாவுக்கு தமிழ் சினிமாவில் இப்போதைக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்று சொல்லலாம்.

ஒரு பெரிய ஹீரோவாக வந்துவிட வேண்டும் என அவர் ரொம்பவும் முயற்சி செய்து வருகிறார். சமீப காலமாக அவர் நடித்து வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. கடைசியாக இவர் நடிகை நயன்தாராவின் தம்பியாக நடித்த இமைக்கா நொடிகள் படம் தான் ஓரளவுக்கு ஹிட் அடித்தது. இதுவரை தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து வரும் சுதா கொங்கராவின் புறநானூறு படம் கண்டிப்பாக நடிகர் அதர்வாவிற்கு சினிமாவில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும்.

Trending News