சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தளபதி 2 கதையை கூறிய மணிரத்னம்.. பதிலுக்கு ரஜினி குடுத்த ரியாக்சன்

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் கூலி படத்திலும் நடித்து வருகின்றார் ரஜினி.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கூலி படத்திற்கு பிறகு நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினி நடிக்கவுள்ளாராம். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியிருக்கும் ரஜினி யார் கண் பட்டது என்று தெரியவில்லை. உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார்.

அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு, தற்போது வீட்டில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், நெல்சன் கூட்டணிக்கு பிறகு எந்த படத்தில், இவர் நடிப்பார் என்ற கேள்வியை பல நாட்களாக ரசிகர்கள் கேட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இன்ப அதிர்ச்சியை கொடுக்கவுள்ளார் சூப்பர்ஸ்டார்.

மணிரத்னம் படத்தில் இணைகிறாரா வேட்டையன்

ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் விரைவில் இணைய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதால் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இதுதான் ஹாட் டாபிக்காக உள்ளது. மேலும் இப்படத்தை பற்றி பல விஷயங்கள் இணையத்தில் வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.

அதாவது ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிப்பதாகவும், இப்படம் கமலின் நாயகன் படம் போல ஒரு க்ளாஸான படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

மேலும் மணிரத்னம் இரண்டு கதை சொன்னாராம். மணிரத்தினம் சொன்ன இரண்டு கதையில் தளபதி கதை ஓகேவாம் ஆனால் தளபதி பெயரை வைக்கலாமா என்று யோசிக்கிறாராம். அது ஓகே என்றால் தளபதி 2 படமாக இருக்கலாம் எனவும் கூறுகிறார்கள் மேலும் இதில் அரவிந்த் சாமி இணையவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

commercial ஹிட் கொடுக்கும் சூப்பர்ஸ்டார் கிளாசிக் படங்களில் நடிப்பாரா? இந்த நிலையில், ஜெயிலர் 2 அறிவிப்பு வெளியான பிறகு டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Trending News