ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

குட்டி தளபதி-னா சும்மாவா.. விஜய்யை overtake செய்து நடிகையை மடக்கிய சிவகார்த்திகேயன்

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா. இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் இவர் குத்தாட்டத்திற்கு ஆட்டம் போடாத நபர்களே இல்லை என்று கூட சொல்லலாம்.

‘குறிச்சி மடத்த பெட்டி’ பாடலுக்கு மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா போட்ட குத்தாட்டம் அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. இதை தொடர்ந்து, நடிகை ஸ்ரீலீலாவுக்கான மவுசு தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப்பில் உள்ளது. அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு குவிந்து வருகிறது.

அதனால் தான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் சரியாக தேர்வு செய்து, வருகிறார். தான் சிறந்த படத்திலும், தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் கூட நடிப்பதற்காக தளபதி-க்கே நோ சொல்லி இருக்கிறார் ஸ்ரீ லீலா.

SK-ன்னா ஓகே

விஜய் நடித்த ‘கோட்’ படத்தில் இடம்பெற்ற ‘மட்ட’ பாடல் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்தது, அதற்கு முக்கிய காரணம் விஜயுடன் திரிஷா போட்ட குத்தாட்டம் தான். என்ன தான் காலம் மாறினாலும், குத்தாட்டத்திற்கு இருக்கு மவுசு மட்டும் குறையவே இல்லை.

‘மட்ட’ பாடலில் விஜயுடன் நடனமாட திரிஷாவுக்கு முன் நடிகை ஸ்ரீலீலாவிடம் தான் பேசப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை ஸ்ரீலீலா மறுத்துவிட்டாராம். தற்போது, தனக்கு நல்ல ஹீரோயின்க்கான அந்தஸ்த்து கிடைத்துள்ளது. இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதால், ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவது சரியாக இருக்காதென்று வாய்ப்பை நிராகரித்தார் ஸ்ரீலீலா. பலரும் விஜய்க்கு நோ சொல்லிட்டாரா என்று பேசுபொருளாக்கினர்.

ஆனால் அதை எதையும் இவர் கண்டுகொள்ளவில்லை. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘புறநானூறு’ படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் ஸ்ரீலீலா. தற்போது கால் சீட் மற்றும் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆகையால் சிவகார்திகேயனுடன் நடிப்பதற்காக தான், விஜய் க்கு இவர் நோ சொல்லி இருக்கிறார். குட்டி தளபதி ன்னா சும்மாவா என்று தற்போது ரசிகர்கள் இதை கொளுத்தி போட்டு வருகின்றனர்.

Trending News