Good Bad Ugly Trisha: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி படம் பல மாதங்களாக இழுத்து அடித்த நிலையில் தற்போது ஓரளவுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களை சரவெடியாக குதூகலப்படுத்த அக்டோபர் 31ஆம் தேதி அனைத்து திரையரங்கங்களையும் ரிலீஸ் ஆகப்போகிறது.
இதற்கிடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கமிட் ஆகி இருக்கும் குட் பேட் அக்லி படத்திற்கும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆதிக் இயக்குனர் என்பதையும் தாண்டி அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் அவரிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
அதை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்களுக்கு ஏற்ப செதுக்கிக் கொண்டு வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகப்போகிறது. இப்படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதில் அஜித் ஒரு கேங்ஸ்டர் கேரக்டர் நடிப்பது போல் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் அஜித், த்ரிஷா, பிரசன்னா காட்சிகளை வைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. இதனை எடுத்து தற்போது அஜித் மற்றும் த்ரிஷாவின் போட்டோக்களும் நேற்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் அஜித்தை பார்க்கும்போது எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்வதற்கு ஏற்ப உடலை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்து ரசிகர்கள் ரசிக்கும்படியான போஸ்டர் வெளியாயிருக்கிறது.
அதிலும் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான படங்களில் அஜித், வெள்ளை நிற முடியுடன் மட்டுமே முக்கால்வாசி நடித்து வந்தார். ஆனால் தற்போது வந்த புகைப்படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் கருப்பு நிற முடியுடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனை அடுத்து த்ரிஷாவின் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
இதில் த்ரிஷாவை பார்க்கும் பொழுது இளம் ஹீரோயின்களை விட அழகு தேவதையாக ஜொலிக்கிறார். அந்த வகையில் இருவருடைய காம்பினேஷனில் எத்தனையோ படங்கள் வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. இந்த லிஸ்டில் குட் பேட் அக்லி படமும் நிச்சயம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.